tamilnadu

img

11 தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை

சென்னை, ஏப்.5- கொரோனா பரிசோதனை மேற்கொள்  ளும் தனியார் ஆய்வகங்கள், விதிமுறை களை பின்பற்றி பரிசோதனைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் 11 தனியார் மூலக்கூறு ஆய்வகங்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அனுமதி வழங்கியுள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம், அதற்காக சில விதிமுறைகளையும் விதித்துள்ளது.

அந்த விதிமுறைகளை பின்பற்றியே பரிசோதனைகளை மேற்கொள்வதாக தனியார் ஆய்வகங்கள் தெரிவித்துள் ளன. (மேலும் மருத்துவரின் உரிய பரிந்துரை யுடனேயே மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்வதாக கூறும் மருத்துவர்கள், தன்னிச்சையாக வருவோ ருக்கு பரிசோதனை செய்யப்படாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். அதே போல் மாதிரி சேகரிப்பு மற்றும்  பரிசோதனைக்கு பின்னர் மருத்துவக் கழிவுகளை அகற்றுவது போன்றவையும் உரிய முறையில்  மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.