tamilnadu

img

இந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது....  

தில்லி 
இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், 3-ஆம் கட்ட ஊரடங்கை அமல்படுத்த பல்வேறு மாநில அரசுகள் மத்திய அரசை வலியுறுத்தி வரும் நிலையில், நாட்டில் கொரோனா பாதிப்பு 31 ஆயிரத்தை தாண்டியுள்ளது. குறிப்பாக கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 73 பேர் பலியாகியுள்ளனர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது.

ஆறுதல் செய்தியாக 7,696 நோயாளிகள் குணமடைந்துள்ளனர்.  குறிப்பாக நேற்று ஒரே நாளில் மகாராஷ்டிராவில் 729 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், அங்கு மொத்த பாதிப்பு 9 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதுவரை மகாராஷ்டிராவில் 400 பேர் பலியாகியுள்ளனர். இந்தியாவில் கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. இரண்டு வாரத்திற்கு முன்பு 2-வது இடத்தில் இருந்த தமிழ்நாடு 6-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா குஜராத், தில்லி, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் முதல் 5 இடத்தில் உள்ளன.