tamilnadu

img

2017-இல் 2 மடங்கு அதிகரித்த கள்ளநோட்டுக்கள் பறிமுதல்!

புதுதில்லி:
பணமதிப்பு நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட 2016-ஆம் ஆண்டை விடவும், 2017-ஆம் ஆண்டில் பிடிபட்ட கள்ள நோட்டுகளின் எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகம் என்பது, தேசிய குற்றப் பதிவுக் கழக அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.
தேசிய குற்றப்பதிவுக் கழகத்தின் (National Crime Records Bureau) இந்த அறிக்கையின்படி, 2016-ஆம் ஆண்டில் ரூ. 15 கோடியே10 மதிப்பிலான கள்ள நோட்டுக்கள்பிடிபட்டிருந்தன. இது 2017-ஆம் ஆண்டில் ரூ. 28 கோடியே 10 லட்சமாக- அதாவது இரட்டிப்பாகி உள்ளது.அதுமட்டுமன்றி, நாட்டிலேயே குஜராத் மாநிலத்தில் அதிகபட்சமாக ரூ. 9 கோடி ரூபாய் அளவிற்குகள்ள நோட்டுகள் சிக்கியுள்ளன. அதற்கு அடுத்தபடியாக, தில்லியில் ரூ. 6 கோடியே 70 லட்சம், உத்தரப்பிரதேசத்தில் ரூ. 2 கோடியே80 லட்சம் கோடி, மேற்குவங்கத்தில்ரூ. 1 கோடியே 90 லட்சம் மதிப்பிலான கள்ள நோட்டுக்கள் சிக்கியுள்ளன.ரூபாய் தாள்களின் எண் ணிக்கை அடிப்படையில் பார்த் தால், 2016-ஆம் ஆண்டில் 2.81 லட்சம் எண்ணிக்கையிலான கள்ள நோட்டுகள் பிடிபட்டிருந்தன. இது2017-இல் 3.55 லட்சமாக அதிகரித் துள்ளது.இதில், குறிப்பிடப்பட வேண்டியது, கள்ளநோட்டுக்கள் அச்சிட முடியாத வகையில் புதியரூபாய் நோட்டுக்களை தயாரித்துள்ளோம் என்று பிரதமர் மோடி ஜம்பம் அடித்த 2000 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை மட்டும் 74 ஆயிரத்து 998 (14 கோடியே 99 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய்) ஆகும். 2019-ஆம் ஆண்டில் வங்கிகள்மட்டும் 21 ஆயிரத்து 847 நோட்டுக்களை - அதாவது 4 கோடியே 36 லட்சத்து 94 ஆயிரம் ரூபாய் மதிப்பிற்கு 2000 ரூபாய் கள்ளநோட்டுக்களை கண்டறிந்துள்ளது.