tamilnadu

img

வண்ணமய தலைப்புச் செய்தி பொருளாதாரத்திற்கு உதவாது... முதலீட்டாளர், தொழிலாளர்கள் மத்தியில் நம்பிக்கை பிறக்க வேண்டும்

புதுதில்லி:
பொருளாதாரத்தை மேம்படுத்த பொருத்தமான திட்டங்கள் வேண்டுமே தவிர, வண்ணமயமான தலைப்புச் செய்திகளால் பொருளாதாரம் வளர்ந்து விடாது என்று பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசை, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடுமையாக விமர்சித்துள்ளார்.பொருளாதாரம் குறித்த தேசிய கலந்தாய்வு கூட்டத்தில், மன்மோகன் சிங் வெள்ளியன்று கலந்து கொண்டு பேசியுள்ளார். அப்போது அவர் மேலும்கூறியிருப்பதாவது:நம் சமூகத்தின் மீதான வேரூன்றிய சந்தேகக் கண்ணோட்டத்தை பிரதமர் மோடி கைவிட வேண்டும் என்று நான்வலியுறுத்துகிறேன். பரஸ்பர நம்பிக்கை மேலோங்கும் ஒத்திசைவான சமூகத்திற்கு நம்மை மீண்டும் இட்டுச் செல்லவேண்டும். ஆனால் இன்றைய தினத்தில்நம் சமூகத்தின் நிலைமை கவலையளிப்பதாக உள்ளது, சமூகத்தின் இந்தநிலைமைதான் பொருளாதார மந்த நிலைக்கும் காரணம். 

தேசத்தின் பொருளாதார நிலைமைஅதன் சமூக நிலைமையை பிரதிபலிப்பதாகும். ஏனெனில் பொருளாதாரம்தான் மக்களுக்கு இடையேயான சமூக ஊடாட்டங்கள், பல்வேறு தரப்பட்ட பரிமாற்றங்கள் ஆகியவற்றின் செயல்வடிவமாக இருக்கிறது. பரஸ்பர நம்பிக்கை, தன்னம்பிக்கை ஆகியவைதான் பொருளாதார வளர்ச்சியை ஊட்டி வளர்க்கும்சமூக பரிமாற்றங்களாகும். ஆனால், நம்சமூகத்தை நெய்து உருவாக்கும் அந்தகூறுகள், தற்போது கிழிக்கப்பட்டுள்ளன.மோடி அரசு அனைத்தையும், ஒவ்வொருவரையும் சந்தேகம், நம்பிக்கையின்மை என்ற கறைபடிந்த முப்பட்டைக் கண்ணாடி வழியாகவே நோக்குகிறது. அதனொரு பகுதியாகத்தான் ஒழுக்கவாத போலீஸ் கண்காணிப்பு முறையில் பணமதிப்பு நீக்க நடவடிக்கையை மேற்கொண்டது. ஆனால் அது நாட்டை சீரழிவுக்கு கொண்டுசென்று விட்டது.தற்போது பொருளாதார வளர்ச்சி மீட்டெடுக்கப்பட வேண்டுமெனில் அரசுநம்பிக்கையை வளர்த்துக் கொள்வதோடு தன் மீதான மக்களின் நம்பிக்கையையும் உறுதி செய்ய வேண்டும்.தொழில்முனைவோர், முதலீட்டாளர்கள், ஊழியர்கள், தொழிலாளர்கள் ஆகியோர் தங்களை நம்பிக்கையுடனும் பூரிப்புடனும் உணர வேண்டும். தற்போதைய நிலையோ அவர்களை, பயத்துடனும் பதற்றத்துடனுமே செயல்பட வைத்துள்ளது. இதுவே பொருளாதார நடவடிக்கைகளை முடக்குகிறது. பொருளாதார வளர்ச்சியையும் முடங்குகிறது.நம் சமூகத்தில் தற்போதைய நிலவும் பயம் மற்றும் நம்பிக்கையின்மை களையப்பட்டு நம்பிக்கை மலர்ந்தால்தான் பொருளாதாரத்தில் மீண்டும் பெரு வளர்ச்சி காண முடியும்.இதை விடுத்து, வண்ணமய தலைப்புச்செய்திகள், ஆட்சி பற்றிய பெருமித கூப்பாடுகளைக் கொண்ட ஊடகவர்ணனைகளால் எந்தப் பயனும்இல்லை. மேலும், சிறுபிள்ளைத்தனமாக பொருளாதார ஆய்வறிக்கைகள், தரவுகளை மறைப்பதும் பயனளிக்காது.இவ்வாறு மன்மோகன் சிங் பேசியுள்ளார்.