tamilnadu

img

எம்எல்ஏவுக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ சோதனை

உன்னாவ் பாலியல் பயங்கரம்- விபத்து வழக்கு\

லக்னோ, ஆக.4- உன்னாவ் பாலியல் பலாத்காரம் மற் றும் விபத்து வழக்கு தொடர்பாக பல்வேறு இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலம் உன்னா வில் சிறுமி ஒருவர் 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டார். பா.ஜனதா எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார் பாலியல் பலாத்காரம் செய்த தாக சிறுமியின் தரப்பில் குற்றம் சாட்டப் பட்டது.இதுதொடர்பாக எம்.எல்.ஏ. செங்கார் கைது செய்யப்பட்டு சிபிஐ விசா ரணையும் நடைபெற்றது.  இதற்கிடையே போலீஸ் காவலில் சிறுமியின் தந்தை கொல்லப்பட்டார். இது தொடர்பாகவும் விசாரணை தொடர்கிறது. இந்நிலையில் கடந்த ஞாயிறன்று பாதிக் கப்பட்ட சிறுமி சென்ற கார் ரேபரேலியில் விபத்துக்குள் சிக்கியது. இதில் சிறுமி படு காயம் அடைந்தார். ஆபத்தான நிலை யில் அவருக்கு லக்னோ மருத்துவமனை யில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருடன் சென்ற இருபெண்கள் உயிரி ழந்தனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சி யை ஏற்படுத்தியது. இதுதொடர்பான விசா ரணை சிபிஐயிடம் மாற்றப்பட்டுள்ளது. இவ்விவகாரத்தில் கடும் விமர்சனத்தை முன்வைத்த உச்சநீதிமன்றம், 7 நாட்களில் விசாரணையை முடிக்குமாறு சிபிஐக்கு உத்தரவிட்டது. இந்நிலையில் சிபிஐ அதிகாரிகள் உத்தரப்பிரதேச மாநிலத்தில் எம்எல்ஏ செங்காருக்கு சொந்தமான இடங்கள் உள்பட 17 இடங்களில் சோதனை மேற் கொண்டனர்.