தேர்தல் பிரச்சாரத்தில் மு.க.ஸ்டாலின் சாடல்
புதுச்சேரி,அக்.18- புதுச்சேரியில் துணை நிலை ஆளு நர் மூலம் மறைமுகமாக பாஜக ஆட்சி செய்கிறது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார். மதச்சார்பற்ற முற்போக்கு கூட் டணி சார்பில் புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டி யிடும், காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமாரை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் வியாழக்கிழமை (அக்.17)பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:- தமிழகத்தில் நேரடியாக பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆனால், புதுச்சேரியில் துணை நிலை ஆளுநர் மூலம் மறைமுகமாக பாஜக ஆட்சி செய்கிறது. அதனால் தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் மக்கள் நலத்திட்டங்களுக்கு அனுமதி மறுத்து தடைக்கல்லாக ஆளுநர் உள்ளார். கடந்த தேர்தலில் ஜெயலலிதா வால் துரோகி என்று பட்டம் சூட்டப் பட்டவர் ரங்கசாமி. அப்படிப்பட்ட ரங்க சாமியுடன் இன்றைக்கு அதிமுகவினர் கூட்டணி அமைத்துள்ளனர். இத்தேர்தலில் ரங்கசாமிக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஜான்குமாருக்கு கை சின்னத்தில் வாக்களிக்கவேண்டும் . இவ்வாறு ஸ்டாலின் பேசினார். முன்னதாக தென்றல் நகர் ஆட்டோ நிறுத்தத்திலிருந்து துவங்கிய பிரச்சாரம் ரயின்போநகர், கிருஷ்ணா நகர், சாமிப்பிள்ளை தோட்டம் ஆகிய பகுதிகளில் திறந்த வேனில் சென்று ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். இப்பிரச்சாரத்தில் காங்கிரஸ்,திமுக, இடது சாரிகட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட மதச் சார்பற்ற கூட்டணி கட்சி தலைவர்கள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.