புதுதில்லி:
காஷ்மீர் மாநிலத்தில் 370, 35ஏ சட்டப் பிரிவுகளை நீக்கி மத்திய அரசு சட்டம் இயற்றியதை எதிர்த்து, கடந்த ஆண்டு ராஜினாமா கடிதம்அளித்தவர் ஐஏஎஸ் அதிகாரி கண்ணன் கோபிநாதன். அவர், ‘இந்தியா டுடே’ நாளிதழுக்கு பேட்டி ஒன்றை அளித்துள் ளார்.
அதில், “மோடி அரசு என்னுடையராஜினாமாவை ஏற்காது. ஏனென் றால் நானாகவே ராஜினாமா செய்துவிட்டேன் என்று ஒரு பிம்பத்தை ஏற்படுத்த அவர்கள் விரும்பவில்லை; அவர்களாகவே டிஸ்மிஸ் செய்ததாக இருக்க வேண்டும் என்றுநினைக்கிறார்கள்” என்று தெரி வித்துள்ளார்.மேலும் “இது மத்திய அரசின் குழந்தைத்தனமான செயல்பாடு” என்றும், “ஆனால், அதுகுறித்து எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை” என்றும் கூறியுள்ள கண்ணன் கோபிநாதன், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தினால் ஏற்படப்போகும் ஆபத்து குறித்து மக்கள் நன்றாகத் தெரிந்து வைத்திருப்பதாகவும் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக, ஜனவரி 4-ஆம் தேதி,அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழக போராட்டத்தில் கலந்து கொள்ள இருந்த கண்ணன் கோபிநாதன்,உத்தரப்பிரதேச எல்லையில் காவல் துறையால் கைது செய்யப்பட்டு, பின்பு விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.