tamilnadu

img

மூணாறு நிலச்சரிவில் எஜமானர்களின் உடல்களை கண்டுபிடிக்க உதவிய "புவி"க்கு கேரள மோப்ப நாய்கள் பிரிவில் பதவி... 

இடுக்கி 
கேரள மாநிலத்தின் முக்கிய மலை வாசஸ்தலமான இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூணாறு ராஜமலை பகுதியில் 2 வாரங்களுக்கு முன்பு நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் 82 பேர் சிக்கினர். 65 பேர் பலியாகிய நிலையில், 12 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். 5 பேரைக் காணவில்லை. 

இந்த நிலச்சரிவில் பிரதிஷ் குமார் என்பவர் தனது மனைவி, மகள்கள் ஆகியோருடன் உயிரிழந்தார். ஆனால் அவர் வளர்த்த "புவி" என்ற நாய் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது. தனது எஜமானர்களை இழந்த புவி என்ன நடந்தது என்பது புரியாமல் அங்கும் இங்கும் ஓடியது. ஒருகட்டத்தில் தானாக மீட்பு பணியில் இறங்கி தனது எஜமானர்களை தேடியது. 

புவியின் பலத்த தேடுதல் வேட்டையின் உதவியால் பிரதிஷ் குமார் மற்றும் அவரது ஒரு மகளின் சடலம் மீட்கப்பட்டது. அதோடு புவி சோர்ந்துவிடவில்லை. கிட்டத்தட்ட மீட்பு குழுவின் ஒரு வீரராக செயல்பட்ட மேலும் பல உடல்களை மீட்க உதவியது. ஆனால் மீட்பு பணிக்காக பெரியளவில் பள்ளம் தோண்டப்பட்டதால் புவியை போலீசார் குழிக்குள் அனுமதிக்கவில்லை. அதனால் பிரதீஷ் குமாரின் அவரது மனைவி மற்றும் மற்றொரு மகளின் சடலத்தை இன்று வரை கண்டுபிடிக்க முடியவில்லை. 
தனக்கு உணவிட்டு வளர்த்த எஜமானர்களுக்காக அன்று முதல் இந்த வாரம் வரை சுமார் 15 நாட்கள் உணவு உண்ணாமல், உறங்காமல் அயராது மீட்பு பணியில் ஈடுபட்ட புவிக்கு கேரள மோப்ப நாய் படை பிரிவில் (இடுக்கி சரகம்) பதவி கிடைத்துள்ளது.  
முறையான பயிற்சி வழங்கப்பட்டு விரைவில் போலீஸ் படை பிரிவில் களமிறக்குவோம் என கேரள மோப்ப நாய் படை பிரிவு உறுதி மொழியோடு புவியை தனது கை தாங்களாக தூக்கி சென்றுள்ளது. புவியும் ஆடம் பிடிக்காமல் தனது போலீஸ் பயிற்சிக்கு சமத்தாக சென்றுவிட்டது. 

புவியின் பாசத்திற்கும், கடின உழைப்பிற்கும், திறமைக்கும் கிடைத்தது அரசு வேலை...