tamilnadu

img

2 மணி நேரத்தில் ஆஜராக எந்தச் சட்டம் சொல்கிறது?

புதுதில்லி:
சட்டத்தின் எந்த விதிகளின் கீழ்,இரண்டு மணி நேரத்திற்குள் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பினீர்கள்? என்று, சிபிஐ-க்கு ப. சிதம்பரத்தின் வழக்கறிஞர் அர்ஷ்தீப் சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் ப. சிதம்பரம் மனு தாக்கல்செய்தார். இந்த வழக்கை செவ்வாயன்று விசாரித்த நீதிமன்றம், முன் ஜாமீன் வழங்க மறுத்து விட்டது.அத்துடன், “பொருளாதாரம் சார்ந்தகுற்றங்களை இரும்புக்கரம் கொண்டு அணுகவேண்டும். இதுபோன்ற பெரிய அளவிலான பொருளாதார குற் றங்களில் விசாரணை அமைப்புகளின் கரங்களை கட்டிவைக்க முடியாது” என்றும் தனது தீர்ப்பில் குறிப்பிட்டது.

இதையடுத்து, முன்ஜாமீனுக்காக உச்ச நீதிமன்றத்தை நாடுவது என ப.சிதம்பரம் தரப்பு முடிவு செய்தது. ஆனால், சிலமணி நேரம்கூட காத்திருக்காமல், தில்லி உயர் நீதிமன்றம் ஜாமீன் மறுத்த உடனேயே ப. சிதம் பரத்திற்கு நேரில் ஆஜராகுமாறு சிபிஐநோட்டீஸ் அனுப்பியது.இதுகுறித்தே ப. சிதம்பரத்தின் வழக்கறிஞர் அர்ஷ்தீப் சிங் குரானா கேள்வி எழுப்பியுள்ளார். “நள்ளிரவில் 2 மணி நேரத்திற்குள் ஆஜராக வேண்டும் என்று எந்தச் சட்டத்தின் கீழ் நோட்டீஸ் வழங்கப்பட்டது? என்பதை சிபிஐதெளிவுபடுத்த வேண்டும்” என்று கேட்டுள்ளார்.இதனிடையே, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவில், முதல் தகவல் அறிக்கையில் தனது பெயர் குறிப்பிடப்படாத நிலையிலும்கூட, தனக்கு முன் ஜாமீன் மறுக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அழைத்த போதெல்லாம்விசாரணைக்கு ஆஜராகி உள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ள சிதம்பரம், நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் தான்,சட்டத்தில் இருந்து தப்பி ஓடி ஒளிய வேண்டிய அவசியம் இல்லை என்றும்கூறியுள்ளார்.