tamilnadu

img

“ராமர் கோவில் அறக்கட்டளையில் ஓபிசி-யினருக்கு இடம் எங்கே?” பாஜக-வைச் சேர்ந்த கல்யாண் சிங் - உமாபாரதி அதிருப்தி

புதுதில்லி:
அயோத்தியில், ராமர் கோயில் நிர்மாணத்திற்காக, 15 பேர் கொண்ட ‘ராம ஜென்ம பூமி தீர்த்தக்‌ஷேத்ரா அறக்கட்டளை’யை பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.இந்த அறக்கட்டளை முழுக்க முழுக்க உயர்சாதியினராலேயே நிரப்பப்பட்டுள்ளதாக குற்றச் சாட்டு உள்ளது. பெயரளவில் தலித் உறுப்பினர் ஒருவருக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது. அந்தஒரு இடமும், இதர பிற்படுத்தப் பட்ட பிரிவைச் சேர்ந்த சாமியார்-சாமியாரிணிகளுக்கு வழங்கப்பட வில்லை. அறக்கட்டளையின் முதல் கூட்டம் பிப்ரவரி 19-ஆம் தேதிநடைபெற உள்ள நிலையில், ராம ஜென்ம பூமி அறக்கட்டளையில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடம் அளிக்கப்படாததற்கு பாஜக தலைவர் உமாபாரதி அதிருப்தி தெரிவித்துள்ளார். “நான் உட்பட பல பிற்படுத்தப் பட்டவர்கள் அயோத்தி ராமர் கோவில் இயக்கத்தில் பங்காற்றி இருக்கிறோம். அதற்கு அங்கீகாரம் தரும் விதமாக இந்த அறக்கட்டளையில் இதர பிற்படுத்தப் பட்ட வகுப்பைச் சேர்ந்தவரையும் இடம்பெறச்செய்ய வேண்டும்.” என்று உமாபாரதி கூறியுள்ளார்.அயோத்தி ராமர் கோவில்அறக்கட்டளையில் ஓ.பி.சி.  உறுப்பினர்கள் இடம்பெறாத தற்கு, பாபர்மசூதி இடிப்பின் போது உத்தரப்பிரதேச முதல்வராக இருந்த கல்யாண் சிங்கும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.