புதுதில்லி:
குடியுரிமை (திருத்த) சட்டத் தில் செருகப்பட்ட ‘சட்டவிரோத குடியேறுபவர்’ என்பதன் வரையறை, தெள்ளத் தெளிவாக இந்திய அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி மதன் பி லோகுர் தெரிவித்துள்ளார்.
“இச்சட்டம் தொடர்பான நாடாளுமன்ற விவாதத்தின்போது, சட்டப்பிரிவு 14-ன் கீழ் கூறப்பட் டுள்ள சமத்துவத்தை உறுதி செய்வது மறக்கப்பட்டு விட்டது” என் றும் லோகுர் சாடியுள்ளார்.“வகைப்பாடு தன்னிச்சையாக இருக்கக் கூடாது, பகுத்தறிவுடையதாக இருக்க வேண்டும், அதாவது, சில குணங்கள் அல்லதுகுணாதிசயங்களை அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண் டும்; அந்த குணங்கள் அல்லது குணாதிசயங்கள் சட்டத்தின் பொருளுடன் நியாயமான உறவைக் கொண்டிருக்க வேண்டும்” என்ற நீதிபதி எஸ்.கே. தாஸின் தீர்ப்பு ஒன்றையும் லோகுர் மேற்கோள் காட்டியுள்ளார்.ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் இவ்வாறு கூறியுள்ள மதன் பி லோகுர்,ஹைதராபாத் என்கவுண்ட்டரில் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதையும் கண்டித்துள்ளார்.
“என்கவுண்ட்டருக்கும் சட் டத்தை மீறிய கொலைக்கும் வித்தியாசம் இருக்கிறது. தெலுங்கானாவில் நடந்திருப்பது சட்டத்தை மீறிய கொலை.” என்று கூறியுள்ள மதன்பி லோகுர், “எந்த போலீசாரின்உயிருக்காவது ஆபத்து வந்ததா? எனவும் விசாரணையின்போதே நான்கு பேரையும் கொல்ல வேண்டிய அவசியம் என்ன? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.நீதிபதி மதன் பி லோகுர் கடந்த2018ஆம் ஆண்டு டிசம்பரில் ஓய்வுபெற்றார். கடந்த ஆகஸ்ட் மாதம்முதல் பிஜி தீவின் உச்சநீதிமன்றநீதிபதியாக உள்ளார்.2018-ஆம் ஆண்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக, செய்தியாளர் சந்திப்பு நடத்திய 4 உச்சநீதிமன்ற நீதிபதிகளில்மதன் பி லோகுரும் ஒருவர் என் பது குறிப்பிடத்தக்கது.