tamilnadu

img

மக்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம்... தீண்டாமை ஒழிப்பு முன்னணி அறிவிப்பு

சென்னை:
மேட்டுப்பாளையத்தில்  தீண்டாமைச்சுவர் இடிந்துவிழுந்து  17 பேர் பலியான சம்பவத்தில் கட்டிட உரிமையாளரை கைது செய்யக் கோரி போராட்டம் நடத்திய மக்கள்மீது காவல்துறையினர்  கொடூரத் தாக்குதல் நடத்தினர்.  தாக்குதல் நடத்திய காவல்துறையைக் கண்டித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில்  தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படுகிறது.இதுகுறித்து முன்னணியின் மாநிலத் தலைவர் த.செல்லக்கண்ணு, பொதுச்செயலாளர் சாமுவேல் ராஜ் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடூர்  பகுதியில் தலித் மக்களுடைய குடியிருப்புக்கு அருகில் மிகவும் பலவீனமாக இருந்த சுவரைஅகற்ற வேண்டும் என அருந்ததியர் மக்கள் கிராமக் கூட்டம் நடத்திஒட்டுமொத்த கிராம மக்களும் கட்டடத்தின் உரிமையாளர் சிவசுப்ர மணியன் என்பவரிடம் பலமுறை வலியுறுத்திய பிறகும் சுவரை அகற்றவில்லை.டிசம்பர் 2 அன்று அதிகாலை 4 மணிக்கு சுவர் விழுந்து இரண்டுகுடும்பங்களைச் சேர்ந்த 3 மாண வர்கள், 11 பெண்கள் உள்பட 17 பேர் பலியாகியுள்ளனர். இந்த கொடூரமான குற்றவாளி மீது எஸ்சி எஸ்டி வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் செய்த அருந்ததியர் மக்கள் மீது காவல்துறை கொடூரமாக தடியடி பிரயோகம் நடத்தியிருக்கிறது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வர்கள் மீது காவல்துறை தடியடி பிரயோகம் நடத்தியதோடு மட்டுமல்லாமல் தமிழ்புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளு வன், திராவிட தமிழர் கட்சியின் தலைவர் வெண்மணி, சமத்துவக் கழகம் தலைவர் கார்க்கி உள்பட24 பேரை சிறையில் அடைத்துள் ளது.உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 25 லட்சம் இழப்பீடும்,அரசு வேலையும் வழங்க வேண்டும். போராடியஅமைப்பினரையும் பொதுமக்க ளையும்  வழக்குகளை வாபஸ் பெற்று விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு தமிழகம் முழு வதும் கண்டனம் முழங்குமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.