tamilnadu

4 அமைச்சர்கள்  பதவி ஏற்பு

 கோவா மாநிலத்தில் ஆளும் பாஜக கூட்டணி அரசுக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில், காங்கி ரஸ் கட்சியின் 10 எம்எல்ஏக்கள் சமீ பத்தில் பாஜகவில் இணைந்தனர்.  இதையடுத்து அமைச்சரவை யில் மாற்றம் செய்து, புதிதாக வந்த வர்களுக்கு வாய்ப்பு வழங்க முதல் வர் பிரமோத் சாவந்த் முடிவு செய் தார். இதற்கு வசதியாக, ஏற்க னவே அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த கூட்டணி கட்சியினர் 4 பேரை நீக்க முதல்வர் பிரமோத் சாவந்த் சனிக்கிழமை உத்தர விட்டார்.  இதைதொடர்ந்து, துணை சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்த மைக்கேல் லோபோ மற் றும் சமீபத்தில் பாஜகவில் இணை ந்த ஃபிலிப்பே ரோட்ரிகுவேஸ், ஜெனிபர் மான்செராட்டே, சந்திர காந்த் கவ்லேகா ஆகியோர் சனி யன்று புதிய அமைச்சர்களாக பத வியேற்றனர். அவர்களுக்கு கோவா ஆளுநர் மிருதுளா சின்ஹா பதவி பிரமாணமும் ரகசிய காப்பு றுதி பிரமாணமும் செய்து வைத் தார்.