tamilnadu

img

மோடியின் பொய்களை சொல்லவே உருவான தனி இணையதளம்

புதுதில்லி:

பிரதமர் நரேந்திர மோடி பேசும் பொய்களை தொகுத்து வழங்குவதற்கு என்றே www.modilies.in என்ற புதிய இணையதளம் உருவாகியுள்ளது.


பிரதமர் மோடி, கடந்த ஐந் தாண்டு ஆட்சிக்காலத்தில் பேசிய அனைத்துப் பொய்களையும் இந்த இணையதளம் வரிசைப்படுத்தி தொகுத்து வெளியிட்டுள்ளது.2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் இந்த மே மாதம் வரை பிரதமர் மோடி கூறிய அனைத்து பொய் களும் இந்த இணையதளத்தில் இடம்பெற்றுள்ளன. ஆண்டு வாரியாகவும், மாத வாரியாகவும் மோடி பேசிய பொய்களை www.modilies.in என்ற தளத்தில் ஒரே கிளிக்கில் தேடி அறிந்து கொள்ளலாம்.


கடந்த மே 12-ஆம் தேதியன்று ‘நியூஷ் நேஷன்’ ஊடகத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி பேட்டி அளித்தார். அதில், “1987-88ஆம் ஆண்டிலேயே நான் முதல்முதலாக டிஜிட்டல் கேமராவை பயன்படுத்தினேன். அப்போது, அத்வானி பங்கேற்ற பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது அவரை நான் டிஜிட்டல் கேமராவில் படம்பிடித்து, அப்படத்தை மின்னஞ்சலில் தில்லிக்கு அனுப்பினேன். அடுத்த நாளே வண்ணப்படமாக வெளியாகியது. அதைக் கண்டு அத்வானி வியந்துபோனார்” என்று மோடி கூறினார்.

அதாவது, 1987-88ஆம் ஆண்டில் டிஜிட்டல் கேமராவையும், இணையத்தையும் பயன்படுத்தியதாக மோடி கூறியிருந்தார். 


உலகிலேயே முதன்முதலில், ஜப்பானில்தான் டிஜிட்டல் கேமரா விற்பனையானது. அதுவும்கூட 1989ஆம் ஆண்டில்தான். ஆனால், அதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தன்னிடம் டிஜிட்டல் கேமரா இருந்தது என்று மோடி பொய் கூறியிருந்தார். அதேபோல, உலகம் முழுவதும் 1991-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6-ஆம் தேதிதான் இணையச் சேவைகள் தொடங்கின. இந்தியாவை எடுத்துக்கொண்டால், 1995-ஆம் ஆண்டில் விஎஸ்என்எல் நிறுவனத் தால் முதல்முதலாக இணையச் சேவைகள் தொடங்கப்பட்டன.


ஆனால், அதற்கு 8 ஆண்டுகளுக்கு முன்பே இணையத்தை பயன் படுத்தியதாகவும் மோடி புளுகியிருந்தார். மோடி ஒரு பொய்யர் என்பது ஏற்கெனவே தெரிந்ததுதான் என்றாலும், நியூஸ் நேஷன் பேட்டி அதை உலக அளவில் கொண்டு சென்றது. இந்நிலையில்தான் மோடியின் பொய்களுக்கு தனி இணையதளமே தற்போது உருவாக்கப்பட்டுள்ளது.இதனிடையே, தொடர்ந்து பொய்களை உரைப்பவர்களைக் குறிப்பதற்கு,(modi - nkho, lid - பொய்) என்ற வார்த்தைகளை இணைத்து ‘அடினடைநை’ என்ற புதிய வார்த்தையையே, ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியில் சேர்த்துள்ளார்கள் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் மோடி

யைக் கிண்லடித்துள்ளார்.