tamilnadu

img

நிர்பயா வழக்கில் ஒரு குற்றவாளி மேல் முறையீடு

புதுதில்லி, ஜன.18- தில்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா என்பவரை 6 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொலை செய்தது. இந்த வழக்கில் 4 பேருக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது. பிப்ரவரி 1 ஆம் தேதியன்று தூக்கில் போடும்படி தில்லி நீதிமன்றம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்நிலையில் குற்றவாளிகளில் ஒருவனான பவன்குமார் குப்தா என்ப வன், தூக்குத் தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரியும், தில்லி உயர்நீதி மன்ற உத்தரவுக்கு எதிராகவும் உச்ச நீதி மன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், சம்பவம் நடந்த 2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தான் சிறு வன் என்றும், அதனால் தனக்கு விதிக்கப் பட்ட தூக்குத்தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும். தனது வழக்கறிஞர் தில்லி உயர்நீதிமன்றத்தில் மோசடியான ஆவணங்களை தாக்கல் செய்ததுடன், தனக்கு ஆதரவாக வாதாடவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குற்றவாளி பவன் குமாரின் மனுவை தள்ளுபடி செய்த உத்த ரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனு மீது திங்களன்று உச்சநீதிமன்றத்தில் விசா ரணை நடைபெறுகிறது.