tamilnadu

img

ஊரடங்கை நீட்டிக்க 80 சதவீத மக்கள் விருப்பம்... இன்ஷார்ட்ஸ் செய்தித்தளம் கணிப்பில் முடிவு

தில்லி 
கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கை மேலும் நீட்டிக்க வேண்டும் என 88 சதவீத மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று, இந்தியாவிலும் பரவி வருகிறது. இந்த ஆட்கொல்லி தொற்று பரவாமல் தடுக்கும் வகையில், நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. வருகின்ற 14-ஆம் தேதியுடன் முடிவையும் ஊரடங்கை மேலும் நீட்டிக்க வேண்டும் என பல்வேறு மாநில அரசுகள் அறிவுறுத்தியதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. இதற்கிடையே ஒடிசா மாநில முதல்வர், அம்மாநிலத்தில் ஏப்.30-ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்.

இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில் 1,135 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாநிலங்களிலும் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
ஊரடங்கைநீட்டிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இந்நிலையில், இன்ஷார்ட்ஸ் என்னும் செய்தித்தளம், சுமார் 40 ஆயிரம் பேரிடம் கருத்துக்கணிப்பு நடத்தியது. அதில், இந்தியாவில் 88 சதவீத மக்கள் ஊரடங்கைநீட்டிக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளனர். மேலும், 92 சதவீதம் பேர், கொரோனா சோதனையை அதிகரிக்க தனியார் துறையும் சோதனை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என கருத்து கூறியுள்ளனர். 88 சதவீதத்தினர், ஊரடங்கு காலத்தில் தாங்கள் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்வதை தவிர்த்ததாகவும் கூறியுள்ளனர்.

கருத்துக்கணிப்பு முடிகள் "சமூக விலகலை கடைப்பிடிப்பதற்கும், கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கும் ஊரடங்கு சிறந்த வழியாகும்" எனத் தெரிவிக்கின்றன.