tamilnadu

img

4.3 சதவிகிதமாக ஜிடிபி சரியும்... நோமுரா நிறுவன ஆய்வில் தகவல்

புதுதில்லி:
அக்டோபர் - டிசம்பர் காலாண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மேலும் சரிந்து, 4.3 சதவிகிதத்திற்கு இறங்கும் என்று ஜப்பானைச் சேர்ந்த ஆய்வுநிறுவனமான ‘நோமுரா’ தெரிவித்துள்ளது.இந்தியப் பொருளாதார மதிப்பை 5 லட்சம் கோடிடாலர் அளவுக்கு உயர்த்தப் போகிறோம் என்று மோடிஅரசு ஜம்பம் அடித்து வந்தாலும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியோ, கடந்த சில ஆண்டுகளாக 5 சதவிகிதத்தைக் கூட தாண்ட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல் - ஜூன்) 5 சதவிகிதமாக மட்டுமே இருந்தது.ஜூலை - செப்டம்பர் காலாண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி இன்னும் மோசமாக 4.5 சதவிகிதமாகக் குறைந்தது.இந்நிலையில்தான் அக்டோபர் - டிசம்பர் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி இன்னும் மோசமாக 4.3 சதவிகிதமாகக் குறையும் என்று ஜப்பானைச்சேர்ந்த ஆய்வு நிறுவனமான ‘நோமுரா’ ஆய்வறிக்கைவெளியிட்டுள்ளது.அடுத்த ஜனவரி - மார்ச் இடையிலான நான்காவதுகாலாண்டை எடுத்துக் கொண்டாலும் அதிகபட்சமாக 4.7 சதவிகிதமாகவே இருக்கும் என்று கூறியுள்ளது.வங்கியல்லாத நிதி நிறுவனங்கள் துறையில் நிலவும் நெருக்கடி, குறைந்து வரும் நுகர்வு ஆகியவற்றால்பொருளாதார வளர்ச்சி மந்தமாக இருக்கிறது என்று நோமுரா நிறுவனம் தெரிவித்துள்ளது.