புதுதில்லி, மார்ச் 2- இந்தியாவில், 2 பேருக்கு கொரானா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கொரானா தடுப்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற் கொள்ளப்படுவதால், அது குறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என மத்திய அரசு கேட்டுக்கொண்டிருக்கிறது. மத்திய அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், தில்லியில் ஒருவரும், தெலுங்கானா மாநி லத்தில் ஒருவரும் என இரண்டு பேர் கொரானா வைரஸ் பாதிப்புடன் மருத்துவமனையில், தனிமைப் படுத்தப்பட்ட வார்டில் அனுமதிக் கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள் ளது. தில்லியில் கொரானா பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டி ருக்கிறவர், இத்தாலியில் இருந்து வந்தவர் என்றும், தெலுங்கானா வில் சிகிச்சை பெறுபவர் துபா யில் இருந்து வந்தவர் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.
இதுதொடர்பாக, தலைநகர் தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், கொரானா பாதிப்பு தடுப்பு நடவடிக்கை, போர்க்கால அடிப் படையில் தீவிரப்படுத்தப்பட்டி ருப்பதால், அதுகுறித்து பொது மக்கள் அச்சப்பட வேண்டாம் என்றார். 21 விமான நிலையங்கள், 12 பெரிய துறைமுகங்கள், 65 சிறிய துறைமுகங்களில், கொரானா சோதனைக்குப் பின்னரே பயணி கள் இந்தியாவிற்குள் அனுமதிக்க ப்படுவதாக அவர் தெரிவித்தார்.