tamilnadu

img

15 சிறப்பு ரயில்கள் இயக்கம்

புதுதில்லி, மே 12- கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால்  நிறுத்தப்பட்ட ரயில் சேவை இரண்டு மாதங்களுக்குப் பிறகு  இயக்கப்படுகிறது. தில்லியில் இருந்து 15 சிறப்பு ரயில்களாக இயக்கப்பட உள்ளன.  இந்த ரயில்கள் சென்னை, பெங்களூரு, திருவனந்தபுரம், மும்பை சென்டிரல், அகமதாபாத், செகந்திராபாத், திப்ருகார், அகர்தலா, ஹவ்ரா, பாட்னா, பிலாஸ்பூர், ராஞ்சி, புவனேசுவர், மட்கோன், ஜம்முதாவி ஆகிய ஊர்களுக்கு புறப்பட்டு செல்லும். இந்த ரயில்கள் அங்கு சென்றுவிட்டு மீண்டும் தில்லிக்கு திரும்பி வரும். இந்த சிறப்பு ரயில் செல்லும் நேரம் குறித்த கால அட்டவணையை ரெயில்வே வெளியிட்டுள்ளது. இதன்படி, சென்னையில் இருந்து வாரம் இருமுறை தில்லிக்கு சிறப்பு  ரயில்கள் இயக்கப்பட உள்ளன. ஒவ்வொரு வாரமும் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு ரயில் காலை 6.35 மணிக்கு இயக்கப்படும் என தெரிவித்துள்ளது.