புதுதில்லி:
ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு உச்சநீதிமன்றத்தில் பிப்ரவரி 4 ஆம் தேதியன்று விசாரணைக்கு வருகிறது.தமிழக சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 அதிமுக எம்.எல்.ஏ. க்கள் அதிமுக கொறாடா உத்தரவுக்கு எதிராக வாக்களித்ததாகவும் அவர்களை தகுதி நீக்கம் செய்யக்கோரியும் தி.மு.க.கொறடா சக்கரபாணி தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது.ஓராண்டுக்கும் மேலாக இந்த வழக்கு விசாரணை ஏதும் இல்லாமல் நிலுவையில் இருந்தது. கடந்த வாரம் தலைமை நீதிபதியை சந்தித்து திமுக தரப்பில் முறையிடப்பட்டது.இந்நிலையில், இந்த வழக்கு பிப்ரவரி 4 ஆம் தேதியன்று விசாரணைக்கு வரும் என்று உச்சநீதி மன்றம் அறிவித்துள்ளது.