tamilnadu

1.40 லட்சம் ரயில்வே காலிப்பணியிடங்கள் 2.40 கோடி பேர் விண்ணப்பம்...

புதுதில்லி:
ரயில்வேயில் காலியாக உள்ள 1.40 லட்சம் பணியிடங்களை நிரப்ப டிசம்பர் 15-ஆம் தேதி முதல் ஆன்லைன் வாயிலாக தேர்வு நடத்தப்படும் என ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.

ரயில்வே வாரியத் தலைவர் விகே யாதவ், வீடியோகான்பரன்ஸ் வாயிலாக அளித்த பேட்டியில் கூறியதாவது:- ரயில்வேயில் மூன்று பிரிவுகளில் (Non Technical Popular Categories(guards, clerks etc-மொத்த பணியிடங்கள் 35208), Isolated & Ministerial,(மொத்த பணியிடங்கள் 1663) Level-1(track maintainers, pointsman etc மொத்த பணியிடங்கள் 1,03,769 ) காலியாக உள்ள 1.40 லட்சம் பணியிடங்களை நிரப்ப டிசம்பர் 15-ஆம் தேதி முதல் ஆன்லைன் வாயிலாக முதல்நிலை தேர்வு நடத்தப்படும். கொரோனா காரணமாக தற்போது வரை தேர்வு நடத்தப்படவில்லை. காலியாக இருந்த1,40,640 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப் பங்களை பெற்றிருந்தோம். தேர்வுக்கான அறிவிப்பு, கொரோனா காலத்திற்கு முன்னர் வெளியானது. விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை முடிந்துவிட்டது. கணினி வழியாக நடக்க இருந்த தேர்வுகொரோனா அச்சுறுத்தல் காரணமாக நடத்தப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார். 1.40 லட்சம் பணியிடங்களுக்கு 2.40 கோடிக்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர்.ரயில்வே காலிப்பணியிடங்களுக்கு தேர்வு நடப்பது தொடர்பான அறிவிப்பை, ரயில்வே அமைச்சர்பியூஷ் கோயலும் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.