புதுச்சேரி,ஜன.29- ‘டிக்டாக்’ போன்ற செயலிகளை ஒழிக்க வேண்டும். வெளிநாட்டு மோகம் நம் நாட்டிற்கு வருவதால் மிகப்பெரும் பாதிப்பு ஏற்படுகிறது என்று புதுவை முதலமைச்சர் நாராயணசாமி கூறினார். புதுவை மகளிர் ஆணையம், தேசிய மகளிர் ஆணையம் இணைந்து அரசுப் பள்ளி ஆசிரியர்கள், தன்னார் வலர்களுக்கு மனநலக் கல்வி மேம்பாட்டு பயிற்சியை 2 நாட்கள் நடத்துகிறது. இதன் தொடக்கவிழா கல்வித்துறை வளாகத்தில் புத னன்று(ஜன.29) நடந்தது. மகளிர் ஆணைய தலைவி ராணி ராஜன்பாபு வரவேற்றார். பயிற்சி முகாமை தொடங்கி வைத்து முதலமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:- இந்தியாவில் மன அழுத்தம் அதிகரித்துள்ளது. வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதே இதற்கு காரணம். கடந்த காலத்தில் கிராம மக்கள் நிம்மதியாக வாழ்ந்த னர். நகரப் பகுதிக்கு வரும்போது வாழ்க்கை முறை மாறிவிட்டது. சம்பாதிக்கும் போராட்டத்தால் மன அழுத்தம் அதிகரித்து விட்டது. அரசுப் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு கல்லூரியில் 50 சதவீத இடஒதுக்கீடு தருகிறோம். கல்விக்கு பட்ஜெட்டில் 8 சதவீத நிதி ஒதுக்குகிறோம். அரசு ஊழி யர்களில் 3-ல் ஒரு பங்கு ஆசிரியர்கள் தான். மனஅழுத்தம் உள்ளவர்களி டம் தொடர்ந்து பேசினால் மனம் மாறும். அதற்காக நமக்கு சகிப்புத் தன்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும். டிக்டாக் போன்ற செயலிகளை முதலில் ஒழிக்க வேண்டும். அமெ ரிக்காவில்தான் இதன் சர்வர் உள்ளது. வெளிநாட்டு மோகம் நம் நாட்டிற்கு வருவதால் மிகப்பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. இவற்றை எதிர்கொள்வது, மன அழுத்தத்தை குறைப்பது குறித்து பயிற்சி தரப்படுகிறது. இதனை ஆசிரியர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மகளிர் ஆணையம் குடும்ப பிரச்சனை வந்தால் பிரிக்கும் வேலையை பார்க்கக்கூடாது, சேர்த்து வைக்க வேண்டும். கிராம மக்களுக்கும் மகளிர் ஆணையம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். போதைப் பொருள் அடிமையாக இருப்பவர்களுக்கு கவுன்சிலிங் நடத்த வேண்டும். சிறுவர்கள் பாதிக் கப்பட்டுள்ளனர். இவர்களுக்கும் உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும். இவ்வாறு அவர் பேசினார்.