நோபல் பரிசு கணிதத் துறைக்கு கொடுக்கப்படுவதில்லை.ஆனால் அதற்கு இணையாக ஏபல் பரிசு என்பது நார்வே நாட்டின் அரசால் கணிதத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு கொடுக்கப்படுகிறது.19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த நார்வே நாட்டு கணித அறிஞர் ஏபெல் என்பவரைக் கவுரவிக்கும் விதமாக இது ஏற்படுத்தப்பட்டது.இந்த ஆண்டு இதற்கு கரேன் கெஸ்குல்லா உலென்பெக்(Karen Keskulla Uhlenbeck) என்ற அமெரிக்கப் பேராசிரியர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இவர் இந்த விருதைப் பெறும் முதல் பெண் அறிஞர் ஆவார்.ஜியோமெட்ரிக் பகுப்பாய்வு மற்றும் காஜ் தியரி ஆகியவற்றில் இவரது அடிப்படையான கண்டுபிடிப்புகளுக்காக இது வழங்கப்படுவதாக நடுவர்கள் கூறினர். இவர்அறிவியல்,கணிதம் ஆகிய துறைகளில் பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் செயற்பாட்டாளர். ஆறு லட்சம் குரோனர் (நார்வே நாட்டு நாணயம்)மதிப்புள்ள இந்த விருது 2003ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது.