2019 ஆம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசானது ஜேம்ஸ் பீபிள்ஸ், மைக்கேல் மேயர், திதியர் க்யூலோஸ் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
உலக அளவில் பொருளாதாரம், அமைதி, இயற்பியல், மருத்துவம் உள்ளிட்ட பல பிரிவுகளுக்கு சுவீடன் நாட்டை சேர்ந்த அமைப்பு சார்பாக ஆண்டு தோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இயற்பியலுக்கான நோபல் பரிசு மூன்று பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் கனடா நாட்டை சேர்ந்த ஜேம்ஸ் பீபிள்ஸ் என்ற விஞ்ஞானிக்கு பேரண்டம் குறித்த ஆய்வுக்காக வழங்கப்பட்டுள்ளது. மேலும் சுவிட்சர்லாந்தை சேர்ந்த மைக்கேல் மேயர் மற்றும் திதியர் க்யூலோஸ் ஆகிய இருவருக்கும் சூரிய குடும்பத்துக்கு வெளியே உள்ள கோள்கள் குறித்த ஆய்வுக்காக வழங்கப்பட்டுள்ளது.