tamilnadu

மூன்று மீன்பிடித் துறைமுகங்கள் தமிழகத்தில் அமைக்க ஒப்பந்தம்

புதுதில்லி:
தமிழகத்தில் 3 இடங்களில் மீன்பிடித் துறைமுகங்கள் அமைப்பதற்கு 453 கோடி ரூபாய் கடன் வழங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.நாகை மாவட்டம் தரங்கம்பாடி, திருவள்ளூர் மாவட்டம்திருவொற்றியூர் குப்பம், கடலூர் முதுநகர் ஆகிய இடங்களில் இருந்து ஏராளமான மீனவர்கள் மீன்பிடிக்கச்செல்கின்றனர். இதைத்தொடர்ந்து அப்பகுதிகளில் மீன்பிடித் துறைமுகங்கள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக தமிழகத்துக்கு  453 கோடி ரூபாய் கடன் வழங்குவதற்கான ஒப்பந்தம் தில்லியில் கையெழுத்தானது.மத்திய மீன்வளத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள மீன்வள கட்டமைப்பு மேம்பாட்டு நிதியத்திடம் 836 கோடியே 80 லட்சம் ரூபாய்கடன் கேட்டு தமிழக அரசு பரிந்துரை சமர்ப்பித்தது. இதில் தமிழ்நாட்டில் 3 மீன்பிடி துறைமுகங்கள் அமைக்க 453 கோடி ரூபாய்கடன் வழங்க அந்த நிறுவனம்ஒப்புக்கொண்டது.இதற்கான ஒப்பந்தம் தில்லியில் மத்திய மீன்வளத்துறை அமைச்சர் கிரிராஜ்சிங் முன்னிலையில் மத்தியமீன்வள அமைச்சகம், தமிழ்நாடு அரசு, நபார்டுவங்கி ஆகியோருக்கு இடையே கையெழுத்தானது.