tamilnadu

img

ஊதியம் வழங்காமல் இழுத்தடிப்பு சாலை பணியாளர்கள் போராட்டம்

நாமக்கல், ஆக.7- நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு உதவி கோட்ட  பொறியாளர் அலுவலகத்தில் பணிபுரியும் சாலைப் பணியாளர்கள் 90 பேருக்கு மாதாந்திர ஊதியம் இதுவரை வழங்கப்படாததால் ஊழியர்கள் திருச்செங்கோடு உதவி கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு புதனன்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு உதவி கோட்ட  பொறியாளர் அலுவலகத்தில் பணிபுரியும் 90 சாலைப்  பணியாளர்களுக்கு இது வரை ஊதியம் வழங்கப்பட வில்லை. இதுகுறித்து உதவி கோட்ட பொறியாளர் கேச வனிடம் ஊழியர்கள் கேட்டபோது, பொறுபற்ற முறையில்  பதில் அளித்துள்ளார். இதனால் ஆவேசமடைந்த சாலைப் பணியாளர்கள்,  தமிழ்நாடு நெடுஞ்சாலைதுறை சாலைப் பணியாளர்கள் சங்கத்தின் மாநில செயலாளர் செந்தில் நாதன் தலைமையில் உள்ளிருப்பு போராட்டத்தில்  ஈடு பட்டனர்.  இதுகுறித்து செந்தில்நாதன் கூறும்போது, வழக்கமாக அரசு ஊழியர்கள் மற்றும் சாலைப் பணியாளர்களுக்கு மாத இறுதியில் ஊதியம் வழங்கப்படும். ஆனால் இந்த மாதம் ஊதியம் வழங்கப்படவில்லை. 7 ஆம் தேதி கடந்த பின் னரும் இதுவரை ஊதியம் வழங்கப்படவில்லை. இது குறித்து உதவி கோட்ட பொறியாளரிடம் கேட்டால் முறை யான பதில் அளிக்கவில்லை. இதனை கண்டித்து சாலைப் பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். எங்களுக்கு ஊதியம் எப்போது கிடைக்கும் என்பதையும், பிடித்தம் செய்யப்பட்ட தொகை எந்த கணக்கில் உள்ளது என்பதையும் எழுத்துப்பூர்வமாக கொடுக்கும் வரை போராட்டத்தை கைவிட போவதில்லை  என்று கூறினார்.   இப்போராட்டத்தில் 50க்கும் மேற்பட்ட சாலைப் பணியாளர்கள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியு றுத்தி முழக்கங்களை எழுப்பினர்.