நாமக்கல், மார்ச் 24- நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா நோய் சமுதாய தொற் றாக உருவாகாமல் தடுக்க மக்கள் தங்கள் ஒத்துழைப்பை முழுமை யாக அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று ஏற்ப டாமல் தடுக்க அனைத்து அரசுத்து றைகளின் சார்பில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட்டு வருகின் றன. வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து வந்த நாமக் கல் மாவட்டத்தை சேர்ந்த நபர்க ளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு அவர்கள் 28 நாட்கள் தங்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப் பட்டு, சுகாதாரத் துறை அலுவ லர்களால் தினசரி கண்காணிக் கப்பட்டு வருகிறார்கள். பொது வாக வீடுகளை விட்டு வெளியே பல இடங்களுக்கு பயணம் செய்வ தாலோ, பிற இடங்களுக்கு பய ணம் செய்து வந்த நபர்களாலோ ஏதேனும் ஒரு வகையில் நமக்கு தெரியாமல் நோய் தொற்று ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. பொதுமக்கள் பால், காய்கறி கள், மளிகை பொருட்கள் ஆகிய அத்தியாவசிய பொருட்கள் விற் பனை செய்யும் கடைகளுக்கு செல் லும்போது 2 மீட்டர் இடைவெளி விட்டு வரிசையில் நின்று பொருட் களை வாங்க வேண்டும். முன் னால், பின்னால் உள்ள நபர்க ளுக்கு கொரோனா வைரஸ் நோய் தொற்று அறிகுறிகள் இல்லாவிட் டாலும், அவர்கள் வைரஸ் கொண் டவராக இருக்க வாய்ப்புள்ளது. ஆகவே, பொதுமக்கள் எப்பொழு தும் 2 மீட்டர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கடைக் காரர்கள் 3 மணி நேரத்திற்கு ஒரு முறை பொதுமக்கள் பயன்படுத் திய இடங்களை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண் டும். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தங்கும் விடுதிகள், உணவகங்க ளில் வெளி நாட்டவர் மற்றும் வெளி மாநிலத்தவர் தங்க வருகை தந்தால் அது குறித்த விவரங் களை உடனடியாக கொரோனா வைரஸ் (கோவிட்-19) தடுப்பு 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை எண் 1077 மற்றும் 8220402437 என்ற கட்டணமில்லா தொலை பேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்க வேண்டும். மேலும், பொதுமக்கள் கொரோனா நோய் தொற்று சமு தாய நோய் தொற்றாக உருவா காமல் தடுக்க விழிப்புணர்வு பெறு வதுடன், அரசு மேற்கொள்ளும் நட வடிக்கைகளுக்கு தங்கள் ஒத்து ழைப்பை முழுமையாக அளிக்க வேண்டும். அவ்வாறு ஒத்துழைப்பு நல்காதவர்கள் மீது இந்திய தொற்று நோய் சட்டம் 1897ன் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரி வித்துள்ளார்.