நாமக்கல், ஜூலை 19– தமிழ்நாடு சிறுபான்மையினர் திட்டத்தின் கீழ் பல்வேறு கடனு தவிகளைப் பெற்று பயனடையுமாறு பொதுமக்களுக்கு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள் ளதாவது, நாமக்கல் மாவட்டத்திற்கு 2020-21-ம் ஆண்டிற்காக சிறுபான் மையினர் நல மக்கள் பயனடையும் வகையில் தமிழ்நாடு சிறுபான்மை யினர் பொருளாதார மேம்பாட்டுக் கழ கம் மூலம் ரூ.2.65 கோடி நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
டாம்கோ கடனு தவித் திட்டங்களுக்கு விண்ணப்ப தாரர் 18 வயது பூர்த்தி அடைந்தவ ராகவும், 60 வயதுக்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடனுதவி வழங் கப்படும். தனி நபர் கடனாக அதிக பட்சமாக ரூ.30 லட்சம் வரை கடனு தவி வழங்கப்படுகிறது.
சுயஉதவிக் குழுவிற்கு ஒரு நபருக்கு ரூ.1 லட்சம் வீதம் ஒரு குழுவிற்கு ரூ.10 லட்சம் கட னுதவி வழங்கப்படுகிறது. மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, நகரக் கூட்டுறவு வங்கி மற்றும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கி மூலம் செயல்படுத்தப்படும். புதிய தொழில், ஏற்கனவே செய்து வரும் தொழிலை விரிவாக்கம் செய்ய கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.