tamilnadu

img

விசைத்தறி தொழிலாளர்களுக்கு போனஸ் ஒப்பந்தம் ஏற்படுத்திடுக பள்ளிபாளையத்தில் சிஐடியு ஆர்ப்பாட்டம்

நாமக்கல்,பிப்.19-  பள்ளிபாளையம் வட்டாரத்தில் விசைத்தறி தொழிலாளர்களுக்கு போனஸ் பேச்சுவார்த்தை மூலம் ஒப்பந்தம் செய்யக்கோரி அக்ரஹா ரம் பேருந்து நிறுத்தம் அருகில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. நாமக்கல், மாவட்டம், பள்ளி பாளையம் வட்டாரத்தில் விசைத்தறி தொழில் பணிபுரியும் அனைத்து பிரிவு ஆண்.பெண் தொழிலாளர்களுக்கு 2018-19 ஆம் ஆண்டு தீபாவளி போனஸ் ஏற்கனவே கொடுத்ததை விட கடந்த ஆண்டு அரை சதவிகிதம் குறைத்து வழங்கினர். இதுகுறித்து சேலம் தொழிலாளர் உதவி ஆணை யரிடம் முறையிடப்பட்டுள்ளது. இத னையடுத்து அவர் முன்னிலையில் முத்தரப்பு நடைபெற்ற பேச்சுவார்த் தையில் உடன்பாடு ஏற்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், விசைத்தறி உரி மையாளர்கள் தொழிலாளர்களுக்கு கொடுத்த வந்த போனசை விட கூடுத லாக வழங்கி ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தி சிஐடியு நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழி லாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலா ளர் எஸ்.முத்துக்குமார் தலைமை வகித் தார். சங்க மாவட்ட தலைவர் கே.மோ கன், செயலாளர் எம்.அசோகன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். சிபிஎம் ஒன்றிய செயலாளர் ஆர்.ரவி வாழ்த்தி பேசினார். சங்கத்தின் ஒன் றிய தலைவர் ஏ.அசன் உட்பட சங்க நிர்வாகிகளும், தொழிலாளர்களும் திராளா ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.