நாமக்கல், ஏப்.11-குறைந்தபட்ச ஊதியம் ரூ.21 ஆயிரம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க நாமக்கல் மாவட்ட குழு கூட்டம் சிஐடியு மாவட்ட குழு அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் கண்ணகி தலைமை வகித்தார். மாநில செயலாளர் டெய்சி, மாநில துணைத் தலைவர் சித்ரசெல்வி ஆகியோர் சிறப்புரையாற்றினர். சிஐடியு மாவட்ட செயலாளர் ந.வேலுசாமி வாழ்த்தி பேசினார். இக்கூட்டத்தில் அங்கன்வாடி ஊழியர்களாக மற்றும் உதவியாளர்களாக பணிபுரிபவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் மாதம் ரூ.21 ஆயிரம் வழங்க வேண்டும். கடைசி மாதத்தில் வாங்கும் ஊதியத்தில் பாதி தொகையை பென்ஷனாக வழங்க வேண்டும். காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.ஓய்வு பெற்று செல்லும் போது ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். பதவி உயர்வு வழங்கவேண்டும். என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இதில், சங்கத்தின் மாவட்ட செயலாளர் எல்.ஜெயக்கொடி, மாவட்ட பொருளாளர் எம்.பூங்கொடி, மாவட்ட துணைத் தலைவர்கள் பாண்டியம்மாள், காந்திமதி. மணிமேகலை இணைச்செயலாளர்கள் கலா. நாஜீரா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.