tamilnadu

img

பணி விடுவிப்புச் சான்று வழங்க காலதாமதம் தனியார் பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில்,  ஜூலை 27- குமரி மாவட்ட தனியார் பள்ளி ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தனி யார் பள்ளி ஆசிரியர் அலு வலர் சங்கம் சார்பில் மார்த்தா ண்டம் திருவட்டார் மாவட்ட கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  பணி விடுவிப்புச் சான்று ஆகியவை காலதாமதப்படு த்துவதை கண்டித்தும், மரு தங்கோடு பள்ளி ஆசிரியர்க ளுக்கு தாளாளர் வழங்கிய தண்டனையினை ரத்து செய்து ஆணை வழங்கி யமைக்கு ஒப்புதல் அளிக்க மறுப்பதையும், ஏற்றக்கோடு பள்ளி ஆசிரியரின் உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஆணைக்கு பணப் பலன் வழங்கக் காலதாமதம் செய்வதையும் கண்டித்தும்  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தி ற்கு மாவட்ட செயலாளர் விஜயகுமார் தலைமை வகித் தார். மாநில பொதுச்செயலா ளர் கனகராஜ், மாநில துணை த்தலைவர் சிவஸ்ரீரமேஷ், மாநில செயலாளர் வினோத், மாவட்ட துணைத்தலை வர்கள் ஜாண் கென்னடி, மகேஷ், மாநில செயற்குழு உறுப்பினர் ஜோஸ் பென்சி கர் உள்ளிட்டோர் பேசினர். ஆசிரியர் சங்க நிர்வாகிகள் பென்னட் ஜோஸ், கோவிந் தன் குட்டி, ஸ்டீபன் டேவிட் ராஜ், பிறைட் சிங் மோரிஸ், சகாயதாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.