tamilnadu

img

தமிழக மீனவர்களை தாக்கி பொருட்களை பறித்துச் சென்ற இலங்கை கடற்கொள்ளையர்கள்

வேதாரண்யம், ஜன.24- நாகப்பட்டினம் மாவட்டம் வேதா ரண்யத்தை அடுத்த புஷ்பவனம் மீனவ கிராமத்தில் இருந்து நாகமணி என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் ஞாயிறன்று மதியம் புஷ்பவனம் கடற்கரையில் இருந்து பன்னீர்செல்வம், நாகமுத்து, ராஜே ந்திரன் ஆகிய மூன்று மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். கோடியக்கரைக்கு தென் கிழக்கே மீன் பிடித்து கொண்டிரு க்கும் போது இரவு 10 மணிக்கு ஒரு படகில் மூன்று இலங்கை கடற்கொள் ளையர்கள் வந்து, அதில் ஒருவர் புஷ்பவனம் மீனவர்களின் படகில் ஏறி, கம்பால் மீனவர்களை தாக்கி னார். இதில் மீனவர்கள் பன்னீர் செல்வம், நாகமுத்து, இராஜேந் திரன் மூவரும் காயமடைந்தனர்.  மேலும் படகில் வைத்திருந்த 300 கிலோ வலை, செல்போன், இன்வெட்டர் பேட்டரி, வாக்கி  டாக்கி, ஜி.பி.எஸ், டீசல் 10 லிட்டர் ஆகிய பொருட்களை எடுத்துக் கொண்டுசென்றுவிட்டனர் புஷ்பவனம் மீனவர்கள், அருகில்  மீன் பிடித்து கொண்டிருந்த மீனவர் களிடம் டீசல் வாங்கி ஆறுகாட்டுத் துறை கடற்கரைக்கு திங்களன்று காலை 4 மணிக்கு வந்து சேர்ந்த னர்.  பின்னர் வேதாரண்யம் அரசு மரு த்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.