tamilnadu

 நாகை , தஞ்சாவூர் முக்கிய செய்திகள்

தனியார் கல்லூரி பேருந்து மோதியதில் 2 இளைஞர்கள் படுகாயம்  

தரங்கம்பாடி அக்.6-  நாகை மாவட்டம் மயிலா டுதுறை ரஸ்தா மணவெளி தெருவில் வசித்து வரும் பெருமாள் மகன் பிரகாஷ் (19). இவர் தனியார் நிறு வனத்தில் டிரைவராக பணிபு ரிந்து வருகிறார். பிரகாஷ்  அவரது நண்பர் ராஜாராம னும் மன்னம் பந்தலில் உள்ள  நண்பர் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது மன்னம்பந்தல் மூங்கில் தோட்டம் பகுதி யில் அதிவேகமாக வந்த தனியார் கல்லூரி பேருந்து எதிரே இடது புறமாக வந்து  மோதியதில் சம்பவ இடத்தி லேயே பிரகாஷ் வலது கால்  துண்டாகியது. பின்னால் அமர்ந்து இருந்த அவரது நண்பர் ராஜாராமன் கால்  முறிவு ஏற்பட்டது. பிரகாஷ்  தலைக்கவசம் அணிந்திருந்த தால் உயிர் தப்பினார். பிறகு தனியார் மருத்துவ மனையில் பிரகாஷ், ராஜா ராமன் ஆகியோர் அனுமதி க்கப்பட்டனர். பிரகாஷ் கால் துண்டித்தால் ரத்தப்போக்கு அதிகமாகி மிகவும் ஆப த்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார் இது குறித்து மயிலாடுதுறை காவல் நிலையம் வழக்குப்ப திவு செய்து விசாரணை நடை பெற்று வருகிறது. கல்லூரி பேருந்துகள் மிக அதிகமாக வேகத்தில் அப்பகுதியில் சென்று இதுபோன்ற விபத்துகளுக்கு காரணமாக இருந்து வருகிறது என்று மக்கள் குற்றம் சாட்டி வரு கிறார்கள்.  இதே போல் கடந்த சில  நாட்களுக்கு முன்பு பெரம்ப லூரில் தனியார் கல்லூரி பேருந்துகளின் முந்திச் செல்லும் போட்டியில் கல்லூரி பேருந்து மோதிய தில் சாலையோரம் பேருந்து க்காக நின்றிருந்த 7 பள்ளி  மாணவிகள் படுகாயம டைந்தனர்.

வீட்டு வசதி வாரிய ஒதுக்கீடுதாரர் கூட்டம்

தஞ்சாவூர் அக்.6- தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின், தஞ்சா வூர் பிரிவு மூலம் வீடுகள் மற்றும் மனைகள் ஒதுக்கீடு பெற்றுள்ளவர்கள், அதற்கான மாதத் தவணையை எளிய முறையில் செலுத்தும் வகையில் ஐடிபிஐ வங்கியுடன் இணைந்து நேஷனல் ஆட்டோமே ட்டிக் கிளியரிங் ஹவுஸ் மற்றும் விர்ச்சுவல் அக்கவுண்டிங் சிஸ்டம் ஆகிய வசதிகள் அமல்ப டுத்தப்பட்டுள்ளன.  இதன் மூலம், பயனாளி  கள் ஐடிபிஐ வங்கிக் கணக்கு துவங்கியோ  அல்லது ஏற்கனவே தங்களிடமுள்ள பிற வங்கிக் கணக்குகள் மூலமாகவோ  மாதத் தவணை செலுத்தலாம். இதுகுறித்த ஆலோசனைக் கூட்டம் தஞ்சாவூர் வீட்டு வசதி பிரிவு அலுவலகத்தில் வரும் அக்.11 அன்று காலை 11 மணியளவில் நடைபெற வுள்ளது. வீட்டுவசதி பிரிவு ஒதுக்கீடுதாரர்கள் தங்களது வங்கி கணக்கு புத்தகத்தின் முதல்  பக்க நகலுடன் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படு கின்றனர்” இவ்வாறு தஞ்சாவூர் வீட்டுவசதி பிரிவு செயற்பொறியாளர் ரெங்கநாதன் தெரிவித்துள்ளார்.