tamilnadu

img

திருமெய்ஞானம் தியாகிகள் நினைவு ஜோதி புறப்பட்டது

தரங்கம்பாடி, ஜூலை 15- தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன மாநில மாநாடு  திருநெல்வேலியில் நடைபெற உள்ளதையொட்டி நாகை மாவட்டம் திருக்கடையூர் அடுத்த திருமெய்ஞானம் தியாகிகள் நினைவு ஜோதி திங்களன்று தியாகிகள் நினைவிடத்தில் சங்கத்தின் கௌரவத் தலைவர் ஆர்.மனோகரன் தலைமையில் புறப்பட்டது. சம்மேளன தலைவர் முருகன், மணிமாறன், துணைப் பொதுச்செயலாளர் எஸ்.வைத்தியநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் டி.சிம்சன் தியாகிகள் ஜோதியை எடுத்துக் கொடுத்தார். பொதுச்செயலாளர் பெற்றுக் கொண்டார். கிளை செயலாளர் ஜெயக்குமார் நன்றி தெரிவித்தார்.