தரங்கம்பாடி, பிப்.17- நாகை மாவட்டம், பொறையார் அருகேயுள்ள சங்கரன்பந்தல் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வு மைய திறப்பு விழா சனியன்று நடைபெற்றது. பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் எ.அப்துல் அஜீஸ் தலைமை வகித்தார். ஊராட்சி தலைவர் லெனின் மேஷாக், ஒன்றியக் குழு உறுப்பினர் ஷகிலா அஜீஸ், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் உதய சங்கர், விசலூர் கண்ணன், பெற்றோர் ஆசிரியர் சங்க இணைச் செயலாளர் கரு ணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியர் தி.அசோக் வரவேற்றார். பூம்புகார் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் எஸ். பவுன்ராஜ், மாணவர்கள் பயன் பெறும் வகையில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வு மையத்தை திறந்து வைத்தும் 148 மாணவ-மாணவிகளுக்கு இலவச மிதி வண்டிகளை வழங்கி பேசி னார். இலுப்பூர் ஊராட்சி தலைவர் இரவி, பெற்றோர் ஆசிரியர் சங்க செயற்குழு உறுப்பினர்கள் தாமோதரன், பன்னீர்செல்வம், உத்திரா பதி, ராமகிருஷ்ணன், கார்த்தி கேயன், உயர்நிலை உதவித் தலைமையாசிரியர் சாந்தி கலந்து கொண்டனர். மேல் நிலை உதவித் தலைமையாசி ரியர் பாலசுப்ரமணியன் நன்றி கூறினார்.