நாகப்பட்டினம், மார்ச் 10- 100 நாள் வேலைத் திட்டத்தை முழு மையாக அமல்படுத்த வேண்டும். இத் திட்டத்திற்குக் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். வேலை நாட்களை 250 ஆகவும், தினக்கூலியை ரூ.600- ஆகவும் உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க நாகை மாவட்டக்குழு சார்பில் ஆட்சியர் அலுவல கம் முன்பாக செவ்வாய்க்கிழமை மாநிலம் தழுவிய தொடர் முழக்கப் போராட்டம் எழுச்சியோடு நடைபெற்றது. போராட்டத்திற்கு விவசாயத் தொழி லாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் கே.சித்தார்த்தன் தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்டச் செயலாளரும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான நாகைமாலி, போராட்டம் வெற்றி பெற வாழ்த்திப் பேசி னார். விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஜி.ஸ்டாலின், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ்.துரைராஜ் ஆகியோர் கோரிக்கை உரையாற்றினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினரும், சட்ட மன்ற முன்னாள் உறுப்பினரும், விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலத் தலை வருமான ஏ.லாசர் சிறப்புரையாற்றும் போது, ‘அதிகாரத்தில் இருக்கும் அலுவ லர்களே, நீங்கள் பெறுகின்ற ஊதியத்தில் ஒரு ரூபாய் குறைந்தாலும் நீங்கள் சும்மா விடுவீர்களா? ஆனால், வேறு எந்தத் தொழிலும் செய்ய முடியாமல், 100 நாள் வேலையையே நம்பி உயிர் பிழைக்கும் ஏழைகளின் வயிற்றில் அடிக்கலாமா? 500 பேருக்கு அரைகுறை வேலை கொடுத்து விட்டு, கூலியையும் குறைத்து விட்டு, அதிகம் பேராகக் கணக்குக் காட்டி, எல்லாவற்றிலும் கமிசன் வாங்கிக் கொள் ளையடிக்கிறீர்கள். இந்த எளியவர்களின் அற்பக் கூலியிலுமா சுரண்டுவது? இப்படி எத்தனைக் காலம் ஏமாற்றுவீர்கள்?’ என்று ஆவேசமாக கேள்வி எழுப்பினார். போராட்டத்தில் விவசாயத் தொழிலா ளர் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இயக்கங்களின் சார்பில் 500 க்கு மேற் பட்டோர் கலந்து கொண்டனர். போராட்டத் தின் நிறைவில் மக்களிடமிருந்து பெறப் பட்ட கோரிக்கைகள் அடங்கிய 460 மனுக் களை இயக்கத் தலைவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் மு.இந்துமதியை நேரில் அளித்தனர்.
புதுக்கோட்டை
ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு விதொச மாவட்ட துணைத்தலைவர் எம்.சண்முகம் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பி னர் கே.சண்முகம் போராட்டத்தை தொடங்கி வைத்துப் பேசினார். முடித்து வைத்து மாநிலக்குழு உறுப்பினர் எஸ். சந்திரன் உரையாற்றினார். போராட் டத்தை ஆதரித்து விவசாயிகள் சங்க மாநில துணைச் செயலாளர் எஸ்.பொன்னுச்சாமி, ஜனநாயக மாதர்சங்க மாவட்டச் செயலாளர் டி.சலோமி ஆகி யோர் பேசினர். சங்க நிர்வாகிகள் கே.சித் திரைவேல், பி.பழனிவேல், எம்.ஜோஷி, ஏஎல்.பிச்சை, ஏ.செந்தமிழ்ச்செல்வன், எம்.அடைக்கப்பன், ஏ.இருதயம், கே.சக்திவேல், ராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
திருச்சிராப்பள்ளி
இதே போல் அகில இந்திய விவசா யத் தொழிலாளர் சங்கம் சார்பில் திருச்சி ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க புறநகர் மாவட்ட செயலாளர் பழநிசாமி, மாநகர் மாவட்ட செயலாளர் தங்கதுரை ஆகியோர் தலைமை வகித்தனர். மாநில பொதுச்செயலாளர் அமிர்தலிங்கம் சிறப்புரையாற்றினார். புறநகர் மாவட்ட தலைவர் சுப்ரமணி யன், மாநகர் மாவட்ட தலைவர் செல்வராஜ், சிபிஎம் புறநகர் மாவட்ட செயலாளர் ஜெயசீலன், மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா ஆகியோர் பேசினர். அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க புறநகர் மற்றும் மாநகர் மாவட்ட நிர்வாகிகள், தொழிலாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டர். பின்னர் கோரிக்கை மனுவை டிஆர்ஒ சாந்தியிடம் வழங்கினர்