வேதாரண்யம்:
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கத்திரிபுலம் கிராமத்தில் அனுமதி இல்லாமல் கலவை மண் ஏற்றி வந்த டிராக்டரை நாகை தனிப்படை போலீசார் மடக்கிப் பிடித்தனர். கரியாப்பட்டினம் சக்தி என்பவருக்கு சொந்தமான அந்த டிராக்டரை தென்னம்புலத்தைச் சேர்ந்தஓட்டுநர் வீரமணி ஓட்டி வந்தார். சனிக்கிழமை இரவு கத்தரிப்புலம் கிராமத்தி லிருந்து எந்தவித அனுமதியும் இல்லாமல் கலவை மண்ணை டிராக்டரில் கடத்தி வந்துள்ளார்.
அப்போது நாகையில் இருந்து வந்ததனிப்பிரிவு போலீசார் அந்த டிராக்டரைமடக்கிப் பிடித்தனர். உடனே டிராக்டரை விட்டு ஓட்டுநர் வீரமணி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். நடுரோட்டில் நின்று இருந்த டிராக்டரை தனிப்படை போலீஸ்தீன் கரியாப்பட்டினம் காவல்நிலையத்திற்கு ஓட்டி வந்தார். கரியாப்பட்டி னம் காவல் நிலையத்திற்கு அருகில் வரும்போது மூன்று பேர் திடீரென டிராக்டரை வழிமறித்து சற்றும் எதிர்பார்க்காத நிலையில், டிராக்டரை ஓட்டி சென்ற போலீஸ்காரர் மீது பெட்ரோல் குண்டு வீசினர். இதில் டிராக்டர் முழுவதும் தீ பரவ தொடங்கியது. டிராக்டரைஓட்டி வந்த போலீஸ்காரர் தீன் மேல் தீப்பிடித்து கை, காலில் காயம் ஏற்பட்டது.பெட்ரோல் குண்டு வீசிய 3 பேரும்அந்த இடத்திலிருந்து இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர். காயமடைந்த போலீஸ்காரர் தீன், வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக நாகைஅரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காவல் நிலையம் அருகே இந்த சம்பவம் நடந்திருப்பது அப்பகுதியில் பதற்றமான சூழலை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக கரியாப்பட்டினம் போலீசார் வழக்குப் பதிவு செய்து பெட்ரோல் குண்டு வீசிய 3 பேர் கொண்ட கும்பலை தேடிவருகின்றனர்.