மன்னார்குடி, அக்.20- இந்து தமிழ் நாளிதழ், தஞ்சை மீனாட்சி மருத்துவமனை மற்றும் தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை ஆகியவை சார்பில் நாகை இ.ஜி.எஸ். பிள்ளை கல்லூரியில் நட்சத்திர ஆசிரி யர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. நாகை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் க.குண சேகரன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் டாக்டர் அப்துல் கலாம் விருது, கனவு ஆசிரியர் விருது மற்றும் 2019 ம் ஆண்டு மாநில நல்லாசிரியர் விருது பெற்ற 38 பேருக்கு சிறப்பு விருதுகளையும், கடந்த ஆண்டு +2 பொதுத்தேர்வில் 100 சதம் தேர்ச்சி வழங்கிய அரசுப் பள்ளி தலைமை ஆசிரி யர்கள் மற்றும் ஆசிரியர்கள் 331 பேருக்குவிருது மற்றும் சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி.நாயர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டி.கே.ராஜசேக ரன் ஆகியோர் வழங்கி பாராட்டினர். மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி.நாயர் பேசுகையில், மாணவர்களின் நுண்ணறிவுத் திறன், மனவளம், சமுதாய அறிவு ஆகியவற்றை ஐஇஎஸ் மேம்படுத்தினால் ஐஏஎஸ் ஆக்கலாம். பின்தங்கிய மாணவர்களை முன்னேற்று வதற்குத் தான் ஆசிரியர்கள் முக்கியத்துவம் தர வேண்டும் என்று கூறினார். விழாவில் தஞ்சை மீனாட்சி மருத்துவ மனை பித்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு தலைமை மருத்துவர் சரவணவேல், இஜிஎஸ். பிள்ளை கல்லூரிக் குழும செயலாளர் எஸ் பரமேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.