மும்பை:
பத்திரிகையாளர் என்ற பெயரில் வலம் வரும் சங்-பரிவார் பேர்வழிகளில் அர்னாப் கோஸ்வாமி முக்கியமானவர். ‘ரிபப்ளிக் டிவி’ என்ற பெயரில் செய்தித் தொலைக்காட்சி நடத்தும் இவர், அநாகரிகமான பேச்சுக்களுக்கு பெயர் போனவர்.இவர் அண்மையில், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி குறித்தும் அவதூறாக பேசி சர்ச்சையில் சிக்கினார். அவர் மீது மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உள்பட பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியினர் புகார் கொடுத்தனர். அதன்பேரில் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.இதை எதிர்த்து, அர்னாப் கோஸ்வாமி உச்சநீதி மன்றத்திற்கு ஓடினார். அப்போது, காவல்துறை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் உச்ச நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது.இந்நிலையிலேயே, அர்னாப் கோஸ்வாமி விசாரணைக்காக மும்பையில் உள்ள என்.எம். ஜோஷி காவல்நிலையத்தில் வியாழனன்று காலை ஆஜரானார். அவரிடம், காவல்துறை அதிகாரிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பியதாகவும், அதற்கு அர்னாப் பதில் அளித்ததாகவும் கூறப்படுகிறது.