மும்பை:
மகாராஷ்டிர மாநிலத்தில், 26 கவுன் சிலர்கள், ஒரேநேரத்தில் சிவசேனா கட்சியிலிருந்து விலகியுள்ளனர்.மகாராஷ்டிராவில் அக்டோபர் 21-ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை பாஜக- சிவசேனா கட்சிகள் கூட்டணி அமைத்துசந்திக்கின்றன. எனினும், முதல்வர் பதவி யாருக்கு? என்பதில், இரண்டு கட்சித் தலைவர்களுக்கும் இடையே இப்போது வரை முட்டல் மோதல் தொடர்ந்து கொண்டிருக்கிறது.மகாராஷ்டிராவில் சிவசேனாவைச் சேர்ந்தவர்களும் ஒருநாள் முதல்வர் பதவியை அமர்வார்கள். சிவசேனா கட்சித் தலைவரும், எனது தந்தையுமான பால் தாக்கரேவிடம் ஏற்கெனவே இதுதொடர்பாக வாக்குறுதி அளித்துள்ளேன் என்று உத்தவ் தாக்கரேவும் அண்மையில் கூறியிருந்தார்.அடுத்த ஆண்டு நடைபெறும் தசரா விழாவின்போது, ஆதித்ய தாக்கரே (முதல்வர்) அருகில் பட்னாவிஸ் (துணைமுதல்வராக) அமர்ந்திருப்பார் என்று- அக்கட்சியின் தலைவர் சஞ்சய் ராவத் பேசி வருகிறார்.உள்ளூர் மட்டத்திலும், தொகுதி கிடைக்காத கட்சிக்காரர்கள் வெளிப்படையாகவே போட்டி வேட்பாளர்களாக ஆங்காங்கே களமிறங்கியுள்ளனர்.அந்த வகையில், கல்யாண் (கிழக்கு)சட்டமன்றத் தொகுதி பாஜக-வுக்குஒதுக்கப்பட்ட நிலையில், இங்கு சிவசேனாவைச் சேர்ந்த தனஞ்சய் போடாரே சுயேட்சையாக களமிறங்கியுள்ளார். அவருக்கு ஆதரவாக 26 கவுன்சிலர்கள்மற்றும் 300 கட்சித் தொண்டர்கள் சிவசேனாவிலிருந்து விலகியுள்ளனர். கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு ராஜினாமா கடிதங்களையும் அவர்கள் அனுப்பியுள்ளனர்.