மும்பை:
மும்பையில் ரூ. 24 லட்சம் மதிப்பிலான 2000 ரூபாய் கள்ளநோட்டுக் கள் பிடிபட்டுள்ளன. துபாயிலிருந்து வந்தவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட இந்தரூபாய் நோட்டுக்கள், பாகிஸ்தானில் அச்சிடப்பட்டது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.மகாராஷ்டிர மாநிலம் கல்வாபகுதியைச் சேர்ந்தவர் ஜாவித் ஷேக் (36). இவர், துபாய்க்கு சென்றுவிட்டு விமானத்தில் மும்பைக்கு வந்துள்ளார். சோதனைகள் எல் லாம் முடிந்து, வெளியே வந்த அவர் பேருந்து நிலையத்திற்கு சென்றுள்ளார்.அப்போது அங்கு நின்ற போலீசார், சந்தேகத்தின் பேரில் ஜாவித்ஷேக்கை அழைத்து விசாரித்ததாகவும், அப்போது அவரிடம்ரூ. 24 லட்சம் மதிப்பிற்கு, 2000 ரூபாய் கள்ள நோட்டுக்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.ஒரிஜினல் 2000 ரூபாய் நோட்டில்பாதுகாப்புக்காக 9 அம்சங்கள் இருக்கும். ஆனால், பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்டதாக கூறப்படும் கள்ள நோட்டில் 7 அம்சங்கள் இருந்துள்ளன. அதாவது ஒரிஜினல் நோட்டுகள் போலவே அந்த கள்ளநோட்டுகள் இருந்ததாக கூறப்படுகிறது.இதனையடுத்து அந்த கள்ளநோட்டுக்களை போலீசார் கைப்பற்றி, விசாரணை நடத்தி வருகின்றனர். பிடிபட்ட கள்ள நோட்டுக்களை,தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அதிகாரிகளும் ஆய்வு செய்து வருகின்றனர்.