மும்பை:
சகிப்பின்மையும், வெறுப்பும் அதிகரித்து வருவது, நாட்டின் பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கும் என்று தொழிலதிபர் ஆதி கோத்ரேஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இதுதொடர்பாக விழா ஒன்றில் அவர் மேலும் பேசியிருப்பதாவது:
“புதிய இந்தியாவை உருவாக்குதல் மற்றும்இந்தியப் பொருளாதாரத்தை 5 டிரில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்துவது தொடர்பாக ஒரு தெளிவான செயல் திட்டத்தை வழங்கியதற்காக மோடியை வாழ்த்துகிறேன்.அதேநேரம் நாட்டில் நடக்கும் சம்பவங்கள் எதுவும் நல்லவையாக இல்லை. நாட்டில் நிலவும் பெரிய அளவிலான வறுமை; அதிகரிக்கும் சகிப்பின்மை, உறுதியற்ற சமூகச்சூழல், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், கலாச்சாரக் காவலர்களின் செயல்பாடுகள், சாதி மற்றும் மதம் சார்ந்தவன்முறைகள் போன்றவை நாட்டில் அதிகரித்து வருகின்றன.வேலைவாய்ப்பின்மை 6.1 சதவிகிதமாக உள்ளது. இது கடந்த 40 ஆண்டுகளில் மிக அதிகம்.எனவே, இந்த பிரச்சனைக்குத் தீர்வுகாண வேண்டும். மேலும், தண்ணீர்ப் பஞ்சம், சுற்றுச்சூழலைப் பாதிக்கும் வகையில் அதிகளவிலான பிளாஸ்டிக் பயன்பாடு, பற்றாக்குறையான மருத்துவ வசதிகள், குறைந்த அளவிலேயே சுகாதாரத்திற்கு நிதி ஒதுக்கப்படுவது போன்ற சிக்கல்களுக்கும் தீர்வுகாண வேண்டும்.”இவ்வாறு ஆதி கோத்ரேஜ் பேசியுள்ளார்.