“நாட்டின் சுகாதாரத்துறை வெண்டிலேட்டரில் இருக்கிறது”
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வில் புதன் அன்று சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்ச கத்தின் செயல்பாடுகள் தொடர்பாக நடை பெற்ற விவாதத்தில் பங்கேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் முனைவர் வி.சிவதாசன், பொது சுகாதாரம் குறித்து உரிய தரவுகள் இல்லா மல் எப்படிக் கொள்கைத் திட்டங்களை வகுக் கிறீர்கள் என்று அரசுக்கு கேள்வி எழுப்பி னார். உலகில் குறைந்த சுகாதார நிதி ஒதுக்கீடு “சுகாதாரம் மக்களின் உரிமையாகும். ஆனால், உரிய மருத்துவ சிகிச்சை இல்லா மல் இறக்கும் குழந்தைகள் அதிகம் உள்ள நாடாக இந்தியா இருந்துவருகிறது,” என்று தனது உரையைத் தொடங்கிய சிவதாசன், “2014-15இல் ஒன்றிய அரசாங்கத்தின் சுகா தார பட்ஜெட் என்பது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 0.31 சதவீதமேயாகும். அது இப்போது மேலும் குறைந்து 2025-26இல் 0.27 சதவீதமாகக் குறைந்துள்ளது” என்று சுட்டிக்காட்டினார். “சுகாதார செலவினம் தொடர்பாக அமெ ரிக்கா 13.9 சதவீதம், ஜெர்மனி 10.1 சதவீதம், கனடா 7.9 சதவீதம், கிரேட் பிரிட்டன் 8.9 சத வீதம் செலவு செய்கின்றன. ஆனால் இந்தியா வில் இது வெறும் 0.27 சதவீதம் மட்டுமே யாகும்,” என்று அவர் ஒப்பீடு செய்தார்.
சிலைகளுக்கு பணம் உண்டு; மருத்துவமனைகளுக்கு இல்லை “சிலைகள் அமைப்பதற்கு ஆயிரக்கணக் கான கோடி ரூபாய்கள் செலவு செய்கிறார்கள். ஆனால் மருத்துவமனைகளுக்கு செலவு செய்ய தயாராயில்லை,” என்று அவர் விமர்சித்தார். மொழியின் மீது குறி வைப்பு சுகாதாரத் துறையில் கேரளம் இந்தியா விலேயே மிகவும் முன்னேறிய மாநிலம் என்று குறிப்பிட்ட சிவதாசன், “அதனால்தான் ஒன்றிய அரசாங்கம், கேரள அரசாங்கத்தைத் தண்டிக்க அதன் மூலம் கேரள மக்களைத் தண்டிக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறது,” என்றார். “மலையாளிகளாகிய நாங்கள் ஆரம்ப சுகாதார நிலையங்களின் பெயர்களை ‘பிராத மிக் ஆரோக்யா கேந்திரம்’ என்று வைத்தி ருக்கிறோம். ஒன்றிய அரசு மலையாளப் பலகைகளை உபயோகப்படுத்தாதீர்கள், வேறொரு மொழியில் உள்ள பலகையை உபயோகப்படுத்துங்கள் என்கிறது. இவ்வாறு அவர்கள் எங்கள் கலாச்சாரத்தின் மீதும் எங்கள் மொழியின் மீதும் குறி வைத்துக்கொண்டிருக்கிறார்கள்,” என்று அவர் குற்றம் சாட்டினார். “அவர்கள் கோரியவாறு வண்ணத்தை யும், பெயரையும் மாற்றவில்லை என்ப தற்காக 637 கோடி ரூபாயை விடுவிக்க மறுத்து வருகிறார்கள். கேரளாவிற்கு எய்ம்ஸ் மருத்துவமனை தேவை என்கிற எங்கள் கோரிக்கையை இதுவரை அவர்கள் பரிசீலித்திடவில்லை,” என்றும் அவர் தெரி வித்தார். தரவுகள் இல்லாத திட்டமிடல் “இந்தியாவில் அரசாங்க மருத்துவ மனைகளில் பல போதிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இல்லாமல் இயங்கிக் கொண்டிருக்கின்றன.
மாநில மருத்துவ மனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் எண்ணிக்கை சம்பந்தமாக நான் ஒரு கேள்வி கேட்டிருந்தேன். ஆனால் அதற்கு அவர்கள் அளித்துள்ள பதில் தங்களிடம் இது தொடர்பாக தரவுகள் இல்லை என்பதாகும். தரவுகள் இல்லாமல் எப்படி கொள்கைகளை உருவாக்குகிறார்கள் என்பது ஆச்சரியமாக இருக்கிறது,” என்று அவர் கேள்வி எழுப்பினார். ‘ஆஷா’ தொழிலாளர்களின் நிலை “’ஆஷா’ தொழிலாளர்கள் தங்களின் ஊக்கத்தொகையை உயர்த்திட வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், இப்போது அவர்களுக்கு வெறும் 1200 ரூபாய் ஊக்கத்தொகையாகக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆஷா தொழிலா ளர்களை அவர்கள் தொழிலாளர்களாகவே கருதுவதில்லை,” என்றார். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவு “ஒன்றிய அரசாங்கம் அரசாங்க மருத்துவ மனைகளின் உள்கட்டமைப்பு வசதிகளை உயர்த்திடத் தேவையான பணத்தை முதலீடு செய்திடத் தயாராயில்லை. மாறாக, அவர் கள் இன்சூரன்ஸ் திட்டங்களை ஊக்கு விக்கிறார்கள். அதன்மூலம் அவர்கள் கார்ப்ப ரேட் நிறுவனங்கள் கொழிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். இது மக்களின் பணத்தைக் கொள்ளையடிக்கும் செயலாகும்,” என்று விமர்சித்தார். கோவிட் காலத்து குறைபாடுகள் “கோவிட் தொற்று காலத்தில் ஏராள மான பொருள்களை வாங்கினார்கள். ஆனால் மக்களுக்கு அவற்றைப் பயன்படுத்தவே யில்லை.
2021க்கு முன்பு, மகாராஷ்டிராவில் பிரதமர் பாதுகாப்பு நிதியிலிருந்து 150 வெண்டிலேட்டர்கள் வாங்கினார்கள். ஆனால் இதுவரை அவை பயன்படுத்தப்படவில்லை. காரணம் அவை அனைத்தும் குறைபாடு களுடன் உள்ளன,” என்றார். பொது சுகாதார அமைப்பு வெண்டிலேட்டரில் “சுகாதார அமைச்சர் சுறுசுறுப்பாக இருக்கி றார். ஆனால் பொது சுகாதார அமைப்பு வெண்டிலேட்டரில் இருக்கிறது. இதுதான் எதார்த்தம். இதற்குக் காரணம் அவர்களின் கொள்கை,” என்று குறிப்பிட்ட அவர், “நாட்டின் சுகாதாரத் துறையைக் காப்பாற்றிட நாம் சுகாதாரத் துறையில் தனியார்மயத்தையும், வணிகமயத்தையும் தடுத்து நிறுத்திட வேண்டும். நாம் அனைவரும் இணைந்து நாட்டுக்காக சிறந்ததொரு பொது சுகாதார அமைப்புக்காகப் போராடுவோம். ஒன்றிய அரசாங்கம் சுகாதாரத் துறைக்கு அதிக அள வில் செலவு செய்ய வேண்டும். இதுவே எங்கள் வேண்டுகோள்,” என்று தனது உரையை நிறைவு செய்தார். (ந.நி)