tamilnadu

img

திருவாரூரில் மகளிர் தின திறந்தவெளி கருத்தரங்கம்

ஐடியு உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புகுழு மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பாக, சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, திறந்தவெளி கருத்தரங்கம் சனிக்கிழமை திருவாரூர் கீழவீதியில் நடைபெற்றது. சிஐடியு திருவாரூர் மாவட்ட செயலாளரும், மாநில இணை கன்வீனருமான இரா.மாலதி, அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட மகளிர் அமைப்பாளர் த.தமிழ்சுடர் ஆகியோர் தலைமை வகித்தனர். இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பா.கோமதி, சிஐடியு மாநில குழு உறுப்பினர் ஏ.பிரேமா, ஐசிடிஎஸ் சங்கத்தின் மாநில செயலாளர் வி.தவமணி, தமிழ்நாடு கிராம செவிலியர் சங்கத்தின் மாநில அமைப்பாளர் ஆர்.பரமேஸ்வரி, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி.மகாலட்சுமி உள்ளிட்ட பலர் மகளிர் தின கருத்துரை வழங்கினர்.  கருத்தரங்கத்தில் பங்கேற்ற சிஐடியு மாநில துணை தலைவர் எம்.மகாலட்சுமி சர்வதேச மகளிர் தின வரலாற்றை எடுத்துரைத்து, ஒன்றிய அரசின்  பிற்போக்குத்தனமான நடவடிக்கைகளை கண்டித்தும், மாநில அரசின் தேர்தல் வாக்குறுதிகளான பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவுரையாற்றினார்.  கருத்தரங்கத்தில் சிபிஎம் மாவட்ட செயலாளர் டி.முருகையன், சிஐடியு மாவட்ட தலைவர் எம்.கே. என்.அனிபா, பொருளாளர் கே.கஜேந்திரன், கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே.பி.ஜோதிபாசு, அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ்.செங்குட்டுவன் மற்றும் தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம், அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம், தையல் கலைஞர்கள் சங்கம், மக்களை தேடி மருத்துவம், உள்ளாட்சி ஊழியர் சங்கம் உள்ளிட்ட தோழமை சங்கத்தின் நிர்வாகிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.