“நாட்டுக்காக அர்ப்பணிப்போடு பகத்சிங் போல வாழ வேண்டும்”
செந்தொண்டர் அணிவகுப்பு ஒத்திகையில் கே.பாலகிருஷ்ணன் அறிவிப்பு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டை முன்னிட்டு, மதுரை புறநகர் மாவட்டக் குழுவின் சார்பில் டி. கல்லுப்பட்டியில் செந்தொண்டர் அணிவகுப்பு ஒத்திகை மற்றும் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். பகத்சிங்கின் தியாகம் “மார்ச் 23 என்பது மகத்தான நாள். விடுதலைப் போராட்ட காலத்தில் 24 வயதிலேயே நாட்டுக்காக தூக்கில் தொங்கிய பகத்சிங், சுகதேவ், ராஜகுரு ஆகியோர் தியாகம் செய்த நாள்,” என்று பால கிருஷ்ணன் தெரிவித்தார். பகத்சிங்கின் தந்தை மன்னிப்பு கடிதம் எழுதி உயிர் பிழைக்கலாம் என அறிவுரை கூறிய போது, “மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்து உயிர் வாழ்வ தைவிட 100 முறை பிரிட்டிஷ் அரசாங்கத்தின் தூக்குக் கயிற்றில் தொங்குவதை பெருமையாக கருதுகிறேன்” என்று பகத்சிங் பதிலளித்ததாக பாலகிருஷ்ணன் நினைவுகூர்ந்தார்.
“வழக்கமாக தூக்கில் போடுகையில் முகத்தை கருப்பு துணியால் மூடுவர். ஆனால் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு ஆகியோர் தாங்கள் பிறந்த இந்த பூமியைப் பார்த்துக்கொண்டே சாக விரும்புவதாக கூறி, முகம் மூடாமலேயே தூக்கில் தொங்கவிடப் பட்டனர்,” என்றார். சிங்கங்களாக... “இன்று பல அமைப்புகள் இளைஞர்களை திரட்டுகின்றன. நீங்கள் பகத்சிங்கைப் போல் இந்த நாட்டிற்கு அர்ப்பணிப்போடு வாழ வேண்டும். கோடீஸ்வரனாக, லட்சாதிபதியாக ஆக வேண்டும் என்பதற்காக அல்ல, நாட்டின் நல்ல குடிமகனாக, நாட்டில் இருக்கும் தீமைகளை ஒழிக்கும் போராட்ட சிங்கங்களாக வளர வேண்டும் என்பதற்காகத் தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கிறது,” என்றார் பாலகிருஷ்ணன். “சிலர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இளைஞர்களே இல்லை என்று கூறுகின்றனர். அவர்களிடம் நான் கேட்கிறேன் - எங்கே இளை ஞர்கள் இருக்கிறார்கள் எனக் காண விரும்பி னால், ஏப்ரல் 6 அன்று மதுரைக்கு வாருங்கள். இளைஞர் படை இங்கே தான் இருக்கிறது.
அது வெறும் இளைஞர் படை மட்டும் அல்ல, ஒரு கொள்கைப் படை, லட்சியத்திற்கான படை, சமூகத்தில் நீடிக்கும் அநியாயங்களை, சாதிய ஏற்றத்தாழ்வுகளை எதிர்க்கும் செம்படை,” என்று அவர் அழைப்பு விடுத்தார். மோடி அரசின் கொள்கைகள் பற்றிய விமர்சனம் “மோடி அரசாங்கத்தை பற்றி பேச வேண்டும் என்றால் நேரமும் நாளும் போதாது. இந்த நாட்டை எவ்வளவு விரைவாக ஒழித்துக்கட்ட முடி யுமோ அந்த அளவில் அனைத்து விதமான முய ற்சிகளையும் அவர்கள் மேற்கொள்கின்றனர்,” என்று விமர்சித்தார் பாலகிருஷ்ணன். மணிப்பூர் நெருக்கடி “மணிப்பூர் மாநிலத்திற்கு நேற்று உச்ச நீதி மன்ற நீதிபதிகள் சென்றுள்ளனர். ஒரு கலவரம் பாதித்த பகுதிகளுக்கு ஐந்து நீதிபதிகள் நேரடியா கச் சென்ற வரலாறே கிடையாது. மணிப்பூரில் இனக்கலவரத்தை உருவாக்கி ஓராண்டுக்கும் மேலாக மக்களைக் கொன்று குவித்துள்ள அரசு மோடி அரசாங்கம்,” என்றார். “மோடியை பார்த்துக் கேட்கிறேன்! மணிப்பூர் சந்திர மண்டலத்தில் உள்ளதா? மாதத்தில் பாதி நாட்களுக்கும் மேல் வெளிநாடுகளுக்குச் செல் லும் மோடிக்கு, மணிப்பூருக்குச் சென்று அங்குள்ள மக்களைப் பார்த்து ஆறுதல் சொல்ல நேரம் கிடைக்கவில்லையா?” என்று கேள்வி எழுப்பினார். வக்பு சொத்துக்களை சூறையாட திட்டம் “அடுத்த வாரம் முக்கியமான சட்டத்தை நிறை வேற்ற போகிறார்கள். இஸ்லாமிய மக்களுக்கு இருக்கும் வக்பு சொத்துக்களைக் கையகப்படுத்து வதற்கான சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறை வேற்ற போகிறார்கள்,” என்றும், “இந்து கோயில்க ளுக்கு நிலம் இருக்கலாம், சீக்கிய கோயில்களுக்கு நிலம் இருக்கலாம், ஆனால் இஸ்லாமிய மக்கள் வழிபடும் கோயில்களுக்கு மட்டும் இருக்கும் நிலங்களைக் கைப்பற்றுவது இஸ்லாமிய மக்களை புண்படுத்தாதா?” என்றும் கேட்டார். ஒரே நாடு ஒரே தேர்தல் அபாயம் “ஒரே நாடு ஒரே தேர்தல் என்று வந்தால், மாநிலத்தில் ஆட்சி நீடிக்க முடியுமா என்ற கேள்வி எழும். மாநிலத்தில் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஆறு மாதத்தில் கவிழ்ந்துவிட்டால், அடுத்த நான்க ரை ஆண்டுகளுக்குத் தேர்தலே இருக்காது. நாடாளுமன்றத் தேர்தலோடு சேர்ந்து தான் அடுத்த தேர்தல் வரும்,” என்று எச்சரித்தார். மாநில உரிமைகளுக்கான போராட்டம் “நேற்றைய தினம் தமிழ்நாடு முதலமைச்சர் சிறப்பு வாய்ந்த நடவடிக்கை மேற்கொண்டார். கேரளாவின் பினராயி விஜயன் உள்ளிட்ட முதல மைச்சர்களை அழைத்து சிறப்பு மாநாடு நடத்தி, தீர்மானம் நிறைவேற்றி ஒன்றிய அரசுக்கு அனுப்பி யுள்ளார்,” என்றார். “வருகிற ஏப்ரல் 2, 3 தேதிகளில் மதுரை யில் நடைபெறவிருக்கும் மாநாட்டில், ‘மாநில உரி மைகளைப் பறிப்பதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம், மாநில உரிமைகளைக் கேட்டுப் போராடிப் பெறுவோம்’ என்ற கருத்தை முன் வைப்போம்.
இந்த மாநாட்டில் கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு, தெலுங்கானா, பஞ்சாப், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களின் முதலமைச்சர்கள் கலந்துகொண்டு, இந்தியாவையே மதுரையை நோக்கித் திரும்ப வைக்கும், மோடி அரசின் முகமூடியைக் கிழிக்க வைக்கும் கருத்தரங்கம் நடைபெறப் போகிறது,” என்று அறிவித்தார். சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான குரல் “இன்று இந்தியாவில் சாதியக் கொடுமைகள் தலைவிரித்தாடுகின்றன. திருநெல்வேலியில், தூத்துக்குடியில், பள்ளிக்கூடத்தில் நடந்த கபடிப் போட்டியில் வெற்றி பெற்ற அணியின் தலைவ னாக இருந்த பட்டியல் இனத்து மாணவனை, பரீட்சைக்குச் செல்லும்போது கொடூரமாக வெட்டி, இன்று அவன் மரணத்துடன் போராடிக் கொண்டிருக்கிறான்,” என்று சுட்டிக்காட்டினார். “இந்த நாட்டில் பச்சிளம் குழந்தைகள் மத்தி யிலேயே சாதி உணர்வு வளர்க்கப்படுகிறது. கிரா மங்களிலும் நகரங்களிலும் சாதிக் கொடி கட்டிப் பறக்கிறது. இன்றும் பல ஆலயங்களில் தாழ்த்தப் பட்ட மக்கள் உள்ளே நுழைய முடியவில்லை. பல கிராமங்களில் சாதிக்கென ஒரு சுடுகாடு உள்ளது,” என்று குறிப்பிட்டார். “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாதிய ஏற்றத் தாழ்வுகளை சவக்குழிக்கு அனுப்பும் மகத்தான போராட்டத்தை உறுதியாக நடத்துகிற இயக்கம்.
வேங்கை வயல் பிரச்சனை, விழுப்புரம் பெரிய குப்பம் பிரச்சனை, தமிழ்நாட்டில் எங்கே ஆணவக் கொலை நடந்தாலும், அங்கே நின்று பாதிக்கப் பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கிற இயக்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,” என்றார். கல்லுப்பட்டியில் சாதிப் பெயர்கள் அகற்ற வலியுறுத்தல் “கல்லுப்பட்டியில் வந்தபோது ஒரு அதிர்ச்சி யான செய்தியை அறிந்தேன். தமிழ்நாட்டில் ஒரு காலத்தில் சாதியப் பெயர்களை தெருக்களுக்கு, ஊர்களுக்கு வைத்திருந்தனர். தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு தெருக்களுக்கு இருக்கும் சாதிப் பெயர்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டு பல ஆண்டுகளுக்கு முன்னரே அவற்றை அகற்றிவிட்டனர்,” என்றார். “ஆனால் இங்கு ஊர்வலம் வருகையில் பல இடங்களில் மூப்பனார் தெரு, யாதவர் தெரு, செட்டி யார் தெரு, நாயுடு தெரு என்று அழகான பலகை களில் எழுதி வைத்துள்ளதைக் கண்டேன். மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பேரூராட்சி தலைவர்களை சந்தித்து சாதியப் பெயர்களை வைக்கக் கூடாது என்று மனு கொடுத்த பிறகும், இப்படி பெயர்ப்பலகைகள் வைக்கப்பட்டுள்ளன,” என்று வருத்தம் தெரிவித்தார். “எங்களுடைய மாநாடு முடிந்த பின்னர், இந்த பேரூராட்சியில் வைக்கப்பட்டுள்ள சாதியப் பெயர்கள் அகற்றப்பட வேண்டும். ஒரு வேளை பேரூராட்சி நிர்வாகம் அதைச் செய்யவில்லை என்றால், அந்தப் பெயர்களை அழிப்பதற்கான போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும்,” என்று உறுதியுடன் தெரிவித்தார் பாலகிருஷ்ணன்.