மதுரை:
திமுக ஆட்சியில் தென் தமிழகம் தொழில் வளர்ச்சி பெறும் என நம்புகிறோம் என்று தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் கூறியுள்ளது.
இதுதொடர்பாக சங்கத்தின் தலைவர் முனைவர் என்.ஜெகதீசன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
தமிழக சட்டமன்றத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி கண்டு, தமிழகத்தின் முதல்வராக மு.க. ஸ்டாலின் பதவியேற்கவிருப்பது குறித்து 97 ஆண்டுகால பாரம்பரியத்துடன் தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு அயராது சேவைஆற்றிவரும் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் சார்பாக மனமுவந்த பாராட்டுதல்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சியடை கிறோம்.கொரோனா பெருந்தொற்று நோய் காரணமாக நம் நாட்டில் தொழில் வணிகப் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு குறிப்பாக, தொழில் வணிகத்துறையில் கடுமையான தேக்க நிலை நிலவி வருகிறது. புதிய முதலீடுகள் எதுவும் செய்யப்படவில்லை. வெளிநாட்டு நேரடி முதலீடுகளும் போதிய அளவு வரவில்லை. எனவே வேலை வாய்ப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. மக்களிடம் வாங்கும் சக்தி இல்லாததால் தயாரிக்கப்பட்ட பொருட்களுக்கான கிராக்கி தொடர்ந்து மந்த நிலையிலேயே உள்ளது. இச்சூழ்நிலையில், தமிழகத்தில் புரட்சிகரமான, துணிவான,அறிவுப்பூர்வமான, ஆக்கப்பூர்வ மான நடவடிக்கைகள் மேற்கொண்டுதமிழகத்தை மீண்டும் வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்ல ஏதுவாக, சாதி, மத பேதங்களுக்கு அப்பாற்பட்டு தன்னம்பிக்கையுள்ள மக்களின் முதல்வராக மு.க. ஸ்டாலின் அவர்களை தேர்ந்தெடுத்துள்ளனர். இதன் மூலம் அனைத்துத் துறைகளிலும் பின்தங்கியுள்ள தமிழகம் குறிப்பாக தென் தமிழகம் நல்ல தொழில், வணிக பொருளாதார வளர்ச்சி காணும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் தொழில் வணிக வளர்ச்சி பெற்று பொருளாதாரம் மேம்பாடு அடைய தமிழக அரசுக்குதக்க ஆலோசனைகள் வழங்கிட முதல்வர் தலைமையில் உயரதிகாரிகள், முக்கிய தொழில் வணிக சங்கப் பிரதிநிதிகள் அடங்கிய ஒரு உயர்நிலை ஆலோசனைக் குழுவைஅமைத்திட புதிய முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம். அக்குழு தமிழக முதல்வரின் ஆக்கப்பூர்வமான பல்வேறு நடவடிக்கை களுக்கும் மிகவும் உறுதுணையாக இருக்கும்.தமிழகத்தின் தொழில் வணிக வளர்ச்சி உள்ளிட்ட தமிழக அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கை களுக்கும் எங்களது தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் தொடர்ந்து பூரண ஒத்துழைப்பையும், ஆதரவையும் நல்கிடும் என்று உறுதி அளிக்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.