tamilnadu

img

விபி ஜி ராம் ஜி மசோதாவிற்கு  குடியரசுத் தலைவர் ஒப்புதல் நாட்டில் 20

விபி ஜி ராம் ஜி மசோதாவிற்கு  குடியரசுத் தலைவர் ஒப்புதல் நாட்டில் 20

ஆண்டுகளாக நடை முறையில் உள்ள மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதிச் சட்டத்திற்குப் பதிலாக,  புதிய சட்டத்தை கொண்டு வரும் நோக்  கில் ஒன்றிய புதிய மசோதா ஒன்றை நாடா ளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் தாக்  கல் செய்தது. இதற்கு ‘விபி ஜி ஆர்ஏஎம்  ஜி’ (VB-G RAM G) என்றும் பெயர் மாற்றம்  செய்தது. இந்த மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. திட்டத்திற் காக அரசாங்கம் ரூ.95,000 கோடி நிதியை ஒதுக்கியுள்ளதாக கூறிக்கொண்டாலும் இந்த திட்டத்திற்கான செலவை மாநில அரசுகளின மேல் ஒன்றிய அரசு திணிப்ப தாக ஏற்கெனவே மாநில அரசுகள் குற்றம்  சாட்டின. இருப்பினும் குரல் வாக்கெடுப்பு  மூலம் இந்த மசோதாவை நாடாளுமன் றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றி யது மோடி அரசு. தொடர்ந்து ஞாயிறன்று  மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் திரவு பதி முர்மு ஒப்புதல் அளித்தார்.