மதுரை, மே 12- விவசாய தொழிலாளர் குடும்பங்க ளுக்கு தலா ரூ.7500 வழங்கிட வேண் டும். சமூக இடைவெளி யை பின் பற்றி செய்திடும் வகையில் நிபந்தனை யின்றி அட்டைதாரர்களுக்கு உடனடி யாக 100 நாள் வேலையினை வழங்கிட வேண்டும், 30 நாட்கள் தினக்கூலியை நிவாரணமாக வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி அகில இந்திய விவசாய தொழி லாளர்கள் சங்கத்தின் மதுரை மாவட் டக்குழு சார்பில் அலங்காநல்லூர், வாடிப்பட்டி, மேற்கு ஒன்றியம் கிழக்கு ஒன்றியம், செல்லம்பட்டி, உசிலம் பட்டி, டி.கல்லுப்பட்டி ஆகிய ஒன்றி யத்திற்கு உட்பட்ட கிராம ஊராட்சி களில் தலைவரிடம் 1388 மனுக்கள் அளிக்கப்பட்டது. மேற்கு ஊராட்சி ஒன்றியத்தில் குல மங்கலம், சமயநல்லூர், மஞ்சம்பட்டி, சத்திரப்பட்டி ஆகிய இடங்களில் நடை பெற்றது.
இதில் குலமங்கலம் கிரா மத்தில் நடைபெற்ற மனு கொடுக்கும் நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், சங்கத்தின் மாநிலத் தலைவருமான ஏ.லாசர், மாவட்டச் செயலாளர் சொ .பாண்டியன், தன பால், விதொச மாவட்ட துணைதலைவர் து. ராமமுர்த்தி உள்ளிட்டோர் ஊரா ட்சி தலைவரிடம் மனு அளித்தனர். மற்ற இடங்களில் ஒன்றிய நிர்வாகிகள் மனு அளித்தனர். இதேபோல் அலங்காநல்லூர் ஒன்றியத்தில் கல்லணை, அய்யங் கோட்டை, தனிச்சியம், கொண்டை யம்பட்டி, முடுவார்பட்டி உள்ளிட்ட 7 ஊராட்சிகளில் மனு அளிக்கப்பட் டது. மேலும் அலங்காநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கோரிக்கை கள் அடங்கி மனு அளிக்கப்பட்டது. அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் எல்.கெளசல்யா, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விதொச மாவட்ட தலைவர் வி.உமாமகேஸ்வ ரன், ஒன்றியக்குழு உறுப்பினர் ஆண் டிச்சாமி, மாற்றுதிறனாளிகள் சங்கம் கே.தவமணி ஆகியோர் மனு அளித்த னர்.
வாடிப்பட்டி ஒன்றியத்தில் குரு வித்துறை, மன்னாடிமங்களம், காடு பட்டி, முள்ளிபள்ளம், வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள் ளிட்ட 11ஊராட்சிகளில் மனு அளிக்கப் பட்டது. இந்த நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செய லாளர் ஏ.வேல்பாண்டி, ஒன்றியத் தலைவர் கருப்பசாமி, ஒன்றிய பொரு ளாளர் சின்னச்சாமி, ஒன்றியத் துணை தலைவர் எஸ்.செல்வகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். செல்லம்பட்டி ஒன்றியத்தில் கரு மாத்தூர், புள்ளநேரி, முதலைகுளம், கோவிலாங்குளம் ஆகிய 4 ஊராட்சி களில் மனு அளிக்கப்பட்டது. ஒன்றியத் தலைவர் மலைச்சாமி, ஒன்றியச் செய லாளர் காசி, கட்சியின் ஒன்றியச் செய லாளர் வி.பி.முருகன், மாவட்டக்குழு உறுப்பினர் பி.எஸ்.முத்துப்பாண்டி, தமிழ்நாடு விவசாய சங்க ஒன்றியச் செயலாளர் சி.பி.மகாராஜன் ஆகி யோர் மனு அளித்தனர். உசிலம்பட்டி ஒன்றியத்தில் தொட் டப்பநாயக்கனூர், இராஜாக்காபட்டி, இ.நடுபட்டி உள்ளிட்ட 5 ஊராட்சி களில் சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் குமாராசாமி, கட்சியின் ஒன்றியச் செய லாளர் பி.ராமர் ஆகியோர் மனு அளித்த னர்.
டி.கல்லுப்பட்டி ஒன்றியத்தில் வன்னிவேலம்பட்டி ஊராட்சியில் மனு அளிக்கப்பட்டது. ஒன்றிய நிர்வாகி காரல்மார்க்ஸ், கட்சியின் ஒன்றியச் செயலாளர் வி.சமயன், மாவட்டக்குழு உறுப்பினர் வி.முருகன் ஆகியோர் மனு அளித்தனர். கிழக்கு ஊராட்சி ஒன்றியத்தில் யா.நரசிங்கம், யா.ஒத்தக்கடை, பனைக்குளம், திருக்கானை, கள்ளந் திரி உள்ளிட்ட 7 இடங்களில் மனு அளிக்கப்பட்டது. சங்கத்தின் ஒன்றியத் தலைவர் அழகர்சாமி, செயலாளர் மச்ச ராஜா, பொருளாளர் கார்த்திகைசாமி, கலைச்செலவன் உள்ளிட்ட பலர் மனு அளித்தனர்.
கைது
குலமங்கலத்தில் நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இது குறித்து மாநிலத் தலைவர் ஏ. லாசர் கூறுகையில், அரசு சாராய கடை யை திறந்து வைத்து அவர்களுக்கு பாதுகாப்புடன் சாராயத்தை விநியோ கம் செய்தது. அங்கு சமூக இடை வெளி பற்றி காவல்துறை கவலைப்பட வில்லை, கைதும் செய்யவில்லை. ஆனால் மக்கள் அன்றாட உணவுக்கு சிரமப்படுகின்ற இந்த நேரத்தில் நிவா ரணம் கேட்டும் வேலை கேட்டும் வந்த தொழிலாளர்களை, தலைவர்கள் ஊராட்சி தலைவருடன் பேச்சுவார்த்தையில் இருந்த போது காவல்துறையினர் சமூக இடைவெளி இல்லை என கூறி கைது செய்தனர்.
போராட்டத்தை தலைமையேற்று நடத்திய எங்களை யும் கைது செய்யுங்கள் என்று கூறி காவல்நிலையத்திற்கு சென்ற போது இதனை அறிந்த காவல்துறையினர் அவர்களை விடுவித்தனர். தங்கள் உரிமைக்காக, வேலைக்காக போராடுகிறவர்களை காவல்துறை கைது செய்வது என்பது நியாயமற்ற செயல். அதனை அகில இந்திய விவ சாய தொழிலாளர் சங்கம் வன்மை யாக கண்டிக்கிறது என்றார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 9 ஒன்றியங்களில் 51 ஊராட்சிகளில் மனுக் கொடுக்கும் போராட்டம் நடை பெற்றது. இப்போராட்டத்தில் மாவட்டத் தலைவர் எஸ்.பூங்கோதை, மாவட்ட செயலாளர் ஆர்.சந்திர மோகன், மாவட்ட பொருளாளர் சி.ஜோதிலட்சுமி மாவட்ட நிர்வாகிகள் கே.ராஜேந்திரன், பி.மலைச்சாமி, பால்சாமி, கனகராஜ், ரவிச்சந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
சிவகங்கை
மானாமதுரை ஊராட்சி ஒன்றி யம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற் றது, பின் வட்டார வளர்ச்சி அலுவல ரிடம் மனு கொடுத்து பல்வேறு பிரச்ச னைகள் குறித்து பேசினார்கள். வட்டார வளர்ச்சி அலுவலர் அழகியமீனாள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதாக உறுதி கொடுத்தார். மேலும் தற்போது 50 பேர் வரைக்கும் வேலை கொடுக்க உத்தரவு வழங்கப்பட்டுள்ள தகவலை யும் தெரிவித்தார்.போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் கே.வீரபாண்டி தலைமை வகித்தார். தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் ஒன்றிய செயலா ளர் முத்துராமலிங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செய லாளர் ஆண்டி, சிஐடியு மாவட்டச் செய லாளர் ஆர்.வீரையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தென்காசி தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றியம் பகுதியில் செவ்வாய் கிழமை, 144 தடை உத்தரவு கார ணமாக இரண்டு மாதமாக எந்த வேலைக்கும் செல்லமுடியாமல், மிக வும் சிரமப்பட்டு வரும் விவசாயத் தொழிலாளர்களுக்கு உடனே நூறு நாள் வேலை வழங்க வேண்டும், வேலை இல்லாத காலங்களுக்கு நிவா ரணம் கொடுக்க வேண்டும், ரூ.256 முழு சம்பளத்தையும் கொடுக்க வேண்டும், வேலை அட்டை வைத்தி ருக்கும் அனைவருக்கும் வேலை கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி மனு கொடுக்கும் போராட்டம் நடை பெற்றது. வாகைகுளம், நாணல்குளம், ராம லிங்கபுரம், மந்தியூர், சிவசைலம், பங்களாகுடியிருப்பு ஆகிய பகுதி மக்கள் மனு கொடுத்தனர். 120 மனுக் கள் கொடுக்கப்பட்டன. 56 பேர் கலந்து கொண்டனர்.