tamilnadu

img

கணிக்க முடியாத வைரஸ்.... அமைச்சர் விஜயபாஸ்கர் நழுவல்

மதுரை:
கொரோனா பரவல் பத்துநாட்களில் கட்டுப்படுத்தப்படும் என்று தமிழகமுதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார். ஆனால் அவரது “வார்த்தை ஜாலம்” பொய்யாகிவிட்டது.

உதாரணத்திற்கு விருதுநகர் மாவட்டத்தை எடுத்துக்கொண்டால், அங்கு கொரோனா பரவல் உச்சத்தை அடைந்துள்ளது. திருவில்லிபுத்தூரில் இதன்வேகம் அதிகரித்துள்ளது. வேறு வழியின்றி ஜூலை 27-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 1-ஆம் தேதி வரை இங்கு முழுஊரடங்கை அமல்படுத்துவது என முடிவுசெய்யப்பட்டுள்ளது. பால் மற்றும் மருந்து கடைகள் பெட்ரோல் பங்குகள் ஆகியவை மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. முதல்வரின் பேச்சு குறித்துசுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜய
பாஸ்கரைக் கேட்டால், நிபுணர்களால் கணித்து சொல்ல முடியாத வைரஸாக கொரோனா வைரஸ் உள்ளது என்கிறார்.

விசைத்தறி கூடங்கள் மூடல்
இராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி பகுதி விசைத்தறி தொழிலாளர் களின் மகாசபைக் கூட்டம் வியாழக் கிழமை நடைபெற்றது.அப்போது, கொரோனாவைக் கட்டுப் படுத்துவதற்காக மருத்துவத் துணி உற்பத்தி தொழிற்சாலைகள் மற்றும் 500-க்கும் மேற்பட்ட விசைத்தறி உற்பத்தியை நிறுத்தி, வரும் 26-ஆம் தேதி முதல்ஆகஸ்ட் 2-ஆம் தேதி வரை ஒரு வாரகாலத்திற்கு மூடப்படுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இப்பகுதியில் பணிபுரியும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒருமனதாக வேலை நிறுத்தத்தை ஏற்றுதாமாக சுய ஊரடங்கிற்கு ஒத்துழைப்பு தருவதாக தெரிவித்துள்ளனர்.

ஆனால், இந்த வேலைநிறுத்தம் காரணமாக லட்சக்கணக்கில் வர்த்தகம் மற்றும் ஏற்றுமதிகள் பாதிக்கப்படும் என சமூகஆர்வலர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.இதற்கிடையில், வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், மதுரைமாவட்டத்தில் கொரோனா பரவல் 10 சதவீதத்திலிருந்து மூன்று சதவீதமாகக் குறைந்துள்ளது; தொற்று குறைந்தாலும் பரிசோதனை குறைக்கப்படவில்லை. இ-பாஸ் இன்றி கொடைக்கானலுக்கு சென்ற நடிகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கூறினார்.