தூத்துக்குடி, ஜூன் 2-தூத்துக்குடியில் மாநில அளவிலான செஸ் போட்டிகள் ஜூன் 8 ம் தேதி தொடங்கி இரண்டு நாள்கள் நடைபெறுகிறது.இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட சதுரங்க கழகதலைவர் ஜோ.பிரகாஷ் அளித்த பேட்டியில் கூறியதாவது: தமிழ்நாடு மாநில சதுரங்க கழகமும், தூத்துக்குடி மாவட்ட சதுரங்க கழகமும் இணைந்து நடத்தும் தமிழ்நாடுமாநில செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் ஜூன் 8 மற்றும் 9 ம் தேதிகளில் நடைபெறுகிறது. இதில், ராபிட் எனப்படும் விரைவுப் போட்டியும், பிளிட்ஸ் எனப்படும் அதிரடிப் போட்டியும் நடத்தப் படுகிறது. ஜூன் 8 ஆம் தேதி காலை 9 மணிக்கு தொடங்கும்ராபிட் செஸ் போட்டி 9 ஆம் தேதி மதியம் 12.30 மணியுடன்நிறைவடையும். பிளிட்ஸ் செஸ் போட்டிகள் ஜூன் 9ம் தேதிமதியம் 1 மணிக்கு தொடங்கி மாலை 4.30 மணிக்கு நிறைவடையும். போட்டிகள் சுவிஸ் முறையில் 9 சுற்றுகளாக நடைபெறும். பரிசளிப்பு விழா மாலை 5 மணிக்கு நடைபெறும்.இந்தப் போட்டியில் ஒவ்வொரு மாவட்டத்திலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 2 வீரர் மற்றும் வீராங்கனைகள் சாதாரண கட்டணத்திலும் மற்றவர்கள் கொடைகட்டணத்திலும் பங்கு பெறலாம். மாவட்ட சதுரங்க கழகத்தின் அனுமதியுடன் தமிழகத்தைச் சேர்ந்த வீரர்கள் யார் வேண்டுமானாலும் பொதுப்பிரிவு போட்டியில் கலந்துகொள்ளலாம். போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் ஜூன் 7 ம் தேதிக்குள் நுழைவுக் கட்டணத்தை செலுத்திபெயரை முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு, தூத்துக்குடி மாவட்ட சதுரங்க கழகத்தை 96983 95983, 82484 14260, 94877 03266, 94438 02614 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார். பேட்டியின்போது மாவட்ட சதுரங்க கழகதுணைத் தலைவர் வி.வி.டி. செந்தில் கண்ணன், செயலர் கற்பகவல்லி, காமராஜ் கல்லூரி முதல்வர் நாகராஜன்,உடற்கல்வி இயக்குநர் பாலசிங் ஆகியோர் உடனிருந்தனர்.